உலகக் கோப்பை கிரிக்கெட்: ஐந்துமுறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?

South Africa VS Australia
South Africa VS Australia

உலகக் கோப்பை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரின் அரையிறுதியில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான, ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியுடன் இன்று மோதுகிறது. இந்த போட்டி கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்க அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணி பங்கேற்று விளையாடிய லீக் போட்டிகளில் 9 இல் 7 போட்டிகளில் வென்றுள்ளது. 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. எனினும் ரன்ரேட் விகிதத்தில் தென்னாப்பிரிக்காவைவிட பின்தங்கியிருந்த்தால் மூன்றாவது இடம்தான் கிடைத்தது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா 50 ஓவர் உலக கோப்பை நாக் அவுட் போட்டியில் ஆஸ்திரேவியாவை எதிர்கொள்கிறது. இதற்குமுன் 1999 ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2007 ஆம் ஆண்டில் ஒரு முறையும் இரு அணிகளுக்கும் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இரு போட்டிகளிலுமே ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 7 முறை சந்தித்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா 3 முறையும், தென்னாப்பிரிக்கா 3 முறையும் வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 377 ரன்கள் எடுத்துள்ளது. இதேபோல தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 325 ரன்கள் எடுத்துள்ளது. இதேபோல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா மிகக் குறைவாக எடுத்த ரன்கள் 149. தென்னாப்பிரிவுக்கு எதிராக ஆஸ்திரேலியா எடுத்த மிகக் குறைந்த ரன் 153.

தென்னாப்பிரிக்க அணியில் குயின்டன் டீ காக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சென், கிளாஸன், கேசவ் மகாராஜா உள்ளிட்ட முக்கிய ஆட்டக்காரர்கள் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், மிட்ச் மார்ஷ், கிளென் மாக்ஸ்வெல், ஆடம் ஜம்பா, ஸ்டீவ் ஸ்மித், டிராவில் ஹெட், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட ஆட்டக்காரர்கள் உள்ளனர்.

கொல்கத்தா ஈடன் கார்டன் விளையாட்டு மைதானம் பேடஸ்மென்களுக்கு சாதகமான ஆடுகளம் என்றாலும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமானதுதான்.

பொதுவான வானம் தெளிவாக காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய போட்டியில் பெரும்பாலும் ஆஸ்திரேலிய அணியை தென்னாப்பிரிக்கா வீழ்த்தும் வாய்ப்பு இருப்பதாக ஆட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் இரு அணிகளுக்கும் இது கடுமையான போட்டியாகவே இருக்கும் என்று தெரிகிறது. ஐந்துமுறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவை, தென்னாப்பிரிக்கா வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com