
2019 உலக கோப்பை கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் ரன்னர் இடத்தைப் பிடித்த நியூஸிலாந்து அணி, இன்று உலக கோப்பை கிரிக்கெட் ஒருநாள் போட்டி 2023 லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. பெங்களூர் சின்னசாமி விளையாட்டரங்கில் இந்த போட்டி நடைபெறகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும ஆஸ்தேரிலிய அணிகள் ஏற்கெனவே அரையிறுதிப் போட்டியில் விளையாடுவதை உறுதி செய்துள்ளன. நியூஸிலாந்து அணியும் அரையிறுதியை எட்டிப்பிடிக்கும் முனைப்பில் உள்ளது. அதே நேரத்தில் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கும் இலங்கை அணியும் எப்படியாவது நியூஸிலாந்து அணியை வென்றுவிட வேண்டும் என்ற துடிப்பில் உள்ளது. இன்றைய வெற்றி இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற உதவும்.
அரையிறுதியில் இடம்பெறுவது நியூஸிலாந்து அணியின் கையில்தான் உள்ளது. இலங்கை அணியை வெற்றிகண்டால் நியூஸிலாந்துக்கு 10 புள்ளிகள் கிடைக்கும். ஆனால், இன்னும் இரண்டு நாட்கள் கழித்து இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முடிவு என்ன என்பதை பொருத்தே நியூஸிலாந்தின் அரையிறுதி கனவு முடிவு செய்யப்படும். ஒருவேளை நியூஸாந்தை இலங்கை வீழ்த்தினாலும் அடுத்து நடைபெறும் வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்துக்கு இடையிலான போட்டிகளில் இரண்டு அணிகளின் தோல்வியை பொறுத்தே இது சாத்தியமாகும்.
இன்றைய போட்டியின் போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு ஆட்டம் கைவிடப்பட்டால் அது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு சாதகமாகிவிடும்.
நியூஸிலாந்து அணி வீர்ர் லாக்கி பெர்குஸன் காயங்களிலிருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு பலமாகும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சில் நான்கு ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்த சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதிக்கு பதிலாக பெர்குஸன் இடம்பெறலாம்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி சதம் அடித்த ராச்சின் ரவீந்திரா, மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர் தோல்வி சந்தித்து வந்த இலங்கை அணிக்கு இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் பெருமையாக இருக்கும்.
நியூஸிலாந்தும் இலங்கையும் இதுவரை 101 ஒரு நாள் போட்டியை சந்தித்துள்ளன. இவற்றில் நியூஸிலாந்து 51 முறையும் இலங்கை 41 முறையில் வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. 8 போட்டிகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.