உலககோப்பை அரை இறுதிக்கு செல்லுமா பாகிஸ்தான் அணி?

பாகிஸ்தான் கிரிக்கெட் டீம்
பாகிஸ்தான் கிரிக்கெட் டீம்

சிசி உலககோப்பையின் தொடர் தோல்வியால் பாகிஸ்தான் அணி அரை இறுதி போட்டிக்கு செல்லுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஐசிசி உலககோப்பை தொடரில் ஒன்பது லீக் போட்டிகளில் ஏழு போட்டிகள் வெற்றிபெற்று குறைந்தப்பட்சம் 14 புள்ளிகள் பெற்றால் மட்டுமே அரை இறுதி போட்டிக்கான வாய்ப்பு எளிதாக இருக்கும்.

நேற்று பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு அரை இறுதி வாய்ப்பை பாகிஸ்தான் அணி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றே கூறலாம்.

ஆப்கானிஸ்தான் அணி நான்கு போட்டிகளில் ஒரு போட்டி மட்டுமே வெற்றிபெற்றிருந்த நிலையில் நேற்றைய வெற்றி அந்த அணிக்கு சாதகமாகவே அமைந்தது. இதனை பற்றி பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் “ பிட்ச் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக இல்லை என்பது எங்கள் அணி தோல்வியின் காரணமாக கருதவில்லை. எங்கள் அணியின் வீரர்களுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அதனை எளிதாக கையாண்டார்கள்” என்று தோல்வியை சந்தித்து அரை இறுதி வாய்ப்பு குறைந்த பிறகும் அணியை விட்டுக்கொடுக்காமல் பேசினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகளில் இரண்டு போட்டிகள் மட்டுமே வெற்றிபெற்று நான்கு புள்ளிகள் எடுத்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அணியின் ரன் ரேட்ஸ் மைனஸ் 0.400 என்ற அளவில் தான் இருக்கிறது. இனி விளையாட இருக்கும் நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றால் கூட 12 புள்ளிகள் தான் பெற முடியும்.

பாகிஸ்தான் அணி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணியுடன் அக்டோபர் 27ம் தேதி மோதவுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகள் வெற்றிபெற்று ஒரு பலம் வாய்ந்த அணியாகவே உள்ளது. அடுத்தடுத்து எதிர்கொள்ளும் பங்களாதேஷ், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் பாகிஸ்தான் அணி முழு பங்களிப்புடன் விளையாடினால் மட்டுமே இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற இயலும்.

பங்களாதேஷ் அணி சமபலம் வாய்ந்த அணி என்பதால் அந்த அணியிடம் வெற்றிபெற்றாலும் கூட ஆறு புள்ளிகளுக்கு மட்டுமே முன்னேற முடியும். இதனால் பாகிஸ்தான் அணியின் அரை இறுதி வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com