நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியடைய இது தான் காரணமா?

South Africa Team
South Africa Team

சிசி உலககோப்பையின் 15வது போட்டியில் இரண்டு போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் எடுத்து வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா அணியை நேற்று நடைபெற்ற போட்டியில் வெறும் 38 ரன்கள் வித்தியாசத்தில் இதுவரை ஒருபோட்டியில் கூட வெற்றிப்பெறாத நெதர்லாந்து அணி வென்று மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி உலககோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணி இதுவரை எந்த தோல்வியையும் சந்திக்காமல் வெற்றிமுகத்தோடு விளையாடிவந்தது. அக்டோபர் 7ம் தேதி நடந்த இலங்கைக்கு எதிரான தன்னுடைய முதல் போட்டியில் 428 ரன்கள் எடுத்து இலங்கை அணியை திக்குமுக்காட செய்தது. அதேபோல் அக்டோபர் 12ம் தேதி நடந்த இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 311 ரன்கள் எடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலுமே எதிர் அணியினர் இலக்கை தொட முடியாத அளவிற்கு தென்னாப்பிரிக்கா அணி மிகபலத்தோடுதான் விளையாடிவந்தது.

அதேபோல், உலககோப்பை தொடரில் இதுவரை பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் நெதர்லாந்து அணி விளையாடியது. ஆனால், எந்தபோட்டியிலும் அந்த அணி வெற்றிபெறவில்லை. இதனால் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் நெதர்லாந்து அணி தள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்று தரம்சாலாவில் உள்ள இமாச்சல பிரதேஷ கிரிக்கெட் சங்க மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணியுடன் மோதியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வுச் செய்தது. முதலில் ஆடிய நெதர்லாந்து அணி மழை காரணமாக 7 ஓவர்கள் குறைக்கப்பட்டு 43 ஓவர்களுக்கு 245 ரன்களை எடுத்து. இதன்பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை மட்டும் எடுத்து மிகச் சிறிய அணியிடம் தோல்வியை சந்தித்தது.

உலககோப்பை போட்டியில் இதுவரை எந்தபோட்டியில் வெற்றிப்பெறாமல் இருந்த நெதர்லாந்து அணி, தென்னாப்பிரிக்காவை வென்றதன் மூலம் தன்னுடைய முதல் வெற்றியை பதிவுச் செய்துள்ளது. அதேபோல், புள்ளி பட்டியலில் பூஜியமாக இருந்த அணியின் ஸ்கோர் 2 புள்ளிகளுடன் முன்னேறியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கபடுவது அணியில் திறமையான பந்துவீச்சாளர்களை கூடுதலாக வைத்துக்கொள்ளாததே பலவீனமாகும். நெதர்லாந்துடன் நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி மிடில் ஓவர்களின்போது ஆல்ரவுண்டர் அல்லது ஆறாவது பந்துவீச்சாளர் ஒருவரை இறக்கியிருந்தால் நெதர்லாந்து அணியின் ரன் ரேட்ஸ்களை குறைத்திருக்கலாம்.

நெதர்லாந்து அணி பேட்டிங்கை விட பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணி. ஆனால் நேற்றைய போட்டியில் நெதர்லாந்து அணி கேப்டன் எட்வார்ட்ஸ் 69 பந்துகளில் 78 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை நிலைகுலைய செய்துவிட்டார்.

போட்டி நடந்த தரம்சாலா கிரிக்கெட் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமானது. இரண்டு போட்டிகளில் 300 ரன்கள் மேல் அடித்து வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணியை குறைத்து மதிப்பிட்டதும், ஆடுகளத்தின் தன்மை அறியாததும்தான் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியின் முக்கிய காரணம். ஆனால்,புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்கா 4 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com