டி20 உலககோப்பை கிரிக்கெட்டில் கால்பதிக்கும் உகாண்டா அணி... வாங்க அந்த அணியை பற்றி தெரிஞ்சுக்கலாம்!

uganda cricket team
uganda cricket team

குதி சுற்றில் பலம் வாய்ந்த அணியை பின்னுக்கு தள்ளி, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலககோப்பை தொடரில் முதல் முறையாக உகாண்டா அணி பங்குப்பெற தகுதிப் பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு டி20 உலககோப்பையில் ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து இரண்டு அணிகளை தேர்ந்துதெடுக்க முடிவு செய்தது ஆப்பிரிக்கா கிரிக்கெட் அமைப்பு . அந்த வகையில் நமிபியா, உக்காண்டா,ஜிம்பாப்வே, கென்யா,ருவாண்டா, டான்ஜானியா, நைஜீரியா என ஏழு அணிகள் பங்குப்பெற்றனர்.

இந்த தகுதிப்போட்டியில் உக்காண்டா அணி ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகள் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் டி20 உலககோப்பையில் 20வது அணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த நபியாவும் உலககோப்பையில் தகுதிபெற்றுள்ளது. ஆனால் இந்த அணி ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக்கொண்டிருக்கிறது

உக்காண்டா முதல் முறை கென்யா மற்றும் தான்சானியாவுடன் சேர்ந்து கிழக்கு ஆப்பிரிக்கா அணியை உருவாக்கியது. 1958ம் ஆண்டு கிழக்கு ஆப்பிரிக்கா அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் முதல் முறையாக களத்தில் இறங்கி மோதியது. இப்போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் கிழக்கு ஆப்பிரிக்கா அணி தோல்வியை சந்தித்தது.

uganda cricket team
uganda cricket team

கிழக்கு ஆப்பிரிக்கா அணி 1966ம் ஆண்டு ஐசிசி யின் இணை உறுப்பினராக ஆனது. 1975ன் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை கிழக்கு ஆப்பிரிக்கா அணியில் இருந்த உக்காண்டா அணி ஒருநாள் உலககோப்பை தொடர்களில் பங்குபெற்றது.

பின்னர் 1992 முதல் 1999 வரை கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் மற்ற ஆப்பிரிக்கா நாடுகளுடன் இணைந்து உக்காண்டா உலககோப்பையில் விளையாடியது. ஆனால் இன்று வரை உக்காண்டா தனித்து ஒருநாள் உலககோப்பையில் விளையாடியதில்லை.

அதேபோல் டி20 உலககோப்பை தொடர் 2013ம் ஆண்டுத்தான் தகுதிபோட்டியிலேயே விளையாடியது. இந்த போட்டியில் 13வது இடத்தைப் பிடித்தது. அதற்கு பிறகு 2022ம் ஆண்டுத்தான் உலககோப்பைத் தகுதிப் போட்டியில் 5வது இடத்தைப் படித்தது.

இப்போது 2024ம் ஆண்டு உலககோப்பைகாக்க மீண்டும் முயற்சியை கைவிடாமல் தகுதிப்போட்டியில் கலந்துக்கொண்டது உக்காண்ட அணி. உக்காண்டா கிரிக்கெட் அமைப்பு தோன்றி இத்தனை ஆண்டுகள் சென்றும் இன்னும் உலககோப்பைக்கு தகுதிப் பெறாமல் இருக்கிறோம் என்ற வெறியில் ஆடினார்கள் போல.

இந்தியா, இங்கிலாந்து,போன்ற பலம் வாய்ந்த அணிகளை ஆட்டி படைத்த ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி உக்காண்டா தகுதிப்பெற்றுள்ளது. இந்த முதல் வெற்றியே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com