ஒரே பந்துக்கு 2வது முறை டிஆர்எஸ் கேட்ட அதிசயம்! அதற்கு காரணம் இதுதானாம்! அஸ்வின் கொடுத்த விளக்கம்!

ஒரே பந்துக்கு 2வது முறை டிஆர்எஸ் கேட்ட அதிசயம்! அதற்கு காரணம் இதுதானாம்! அஸ்வின் கொடுத்த விளக்கம்!
Published on

திருச்சி மற்றும் திண்டுக்கல் அணிக்கிடையேயான போட்டியில் ஒரே பந்திற்கு 2 முறை ரிவ்யூ கேட்டது அனைவரையும் வியக்கவைத்ததையடுத்து, அதற்கு அஸ்வின் விளக்கமும் அளித்துள்ளார்.

தற்போது டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் அணியும், திருச்சி அணியும் மோதின. இதில் திண்டுக்கல் அணியின் கேப்டனாக ரவிச்சந்திரன் அஸ்வின் செயல்படுகிறார்.

இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் திருச்சி அணி பேட்டிங்கின் போது, திண்டுக்கல் அணி கேப்டன் அஸ்வின் 12வது ஓவரை வீசினார். அப்போது 5வது பந்தில் திருச்சி வீரர் ராஜ்குமார் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

நடுவர் அவுட் கொடுத்தபின்னர், ராஜ்குமார் 3வது நடுவரிடம் டிஆர்எஸ் முறையீடு செய்தார். அப்போது 3வது நடுவரால் அந்த காட்சியானது ரீப்ளே செய்து பார்க்கப்பட்டது. அப்போது பேட் தரையில் பட்டபோது பந்து பேட்டைக் கடந்து சென்றது. மேலும் பந்து பேட் அருகே வரும் முன்பாகவே ஸ்னிக்கோமீட்டரில் உரசும் சத்தம் காட்டியது. இதையடுத்து பந்து பேட்டில் படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டு நாட் அவுட் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, அஸ்வினால் இந்த முடிவை ஏற்க முடியவில்லை. இதனால் மீண்டும் திண்டுக்கல் அணியின் கேப்டன் என்ற முறையில் தங்களுக்கான டிஆர்எஸ்-ஐ பயன்படுத்தி 2வதாக முறையீடு செய்தார். இதையடுத்து மீண்டும் நடுவர் பந்தை ரீப்ளே செய்து பார்க்க, அப்போது நாட் அவுட் என்றே கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, அஸ்வினிடம் 2வது முறையாக டிஆர்எஸ் கேட்டது குறித்து கேட்கப்பட்டபோது, அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.

டின்பிஎல் தொடருக்கு டிஆர்எஸ் தற்போது புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. பந்து பேட்டைக் கடக்கும்போது ஸ்னிக்கோமீட்டரில் ஸ்பைக் வந்தது. இருந்தும் நடுவர் முடிவு சரியாகப்படவில்லை. வேறு கோணத்தில் கேமரா ஆங்கிள் காட்டப்படும் என்று எண்ணி டிஆர்எஸ் கேட்டதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com