நடுநடுங்க வைக்கும் 5 ஆபத்தான விளையாட்டுகள்! மரணத்தின் விளிம்பிற்கே அழைத்துச் செல்லும்...

dangerous game
dangerous gameImg credit: AI Image

விளையாட்டு என்பது பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கும், பொழுதுபோக்கிற்கும் உரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சில விளையாட்டுகள் அதையும் தாண்டி மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்புபவையாக உள்ளன. சாகசங்களை விரும்பும் வீரர்களுக்கு இவை பிடித்தமானவை என்றாலும், ஒரு சிறிய தவறு கூட உயிரைப் பறிக்கும் அபாயம் கொண்டது. அந்த வகையில் உலகில் மிகவும் ஆபத்தான விளையாட்டுகளின் பட்டியலில் அடிக்கடி இடம்பெறும் விளையாட்டுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

1. பேஸ் ஜம்பிங் (BASE Jumping):

BASE Jumping
BASE JumpingImg credit: AI Image

உலகின் மிகவும் ஆபத்தான விளையாட்டுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது பேஸ் ஜம்பிங். இதில் வீரர்கள் மலை உச்சி, உயரமான கட்டிடங்கள் அல்லது பாலங்களில் இருந்து குதித்து, தரையை அடைவதற்குச் சில நொடிகள் முன்பாகவே பாராசூட்டைத் திறக்க வேண்டும்.

சில ஆய்வுகளில் பேஸ் ஜம்பிங், சாதாரண ஸ்கை டைவிங்கை விட பல மடங்கு அபாயம் கொண்டது எனக் கூறப்படுகிறது. இதில் பாராசூட் திறக்கத் தாமதமானாலோ அல்லது காற்றின் திசை மாறினாலோ மரணம் நிச்சயம். எனவே, இதில் ஆபத்து மிக அதிகம்.

2. புல் ரைடிங் (Bull Riding):

Bull Riding
Bull RidingImg credit: AI Image

புல் ரைடிங் மிக ஆபத்தான விளையாட்டுகளில் ஒன்று. சுமார் 900 கிலோ எடை கொண்ட ஆக்ரோஷமான காளையின் முதுகில் அமர்ந்து, 8 விநாடிகள் விழாமல் இருப்பதே இதன் இலக்கு. இந்த 8 வினாடிகள் மிக ஆபத்தனான 8 வினாடிகள் என அறியப்படுகிறது.

காளையின் காலடியில் மிதிபடுவது, கொம்புகளால் குத்தப்படுவது மற்றும் கீழே விழும்போது ஏற்படும் பலத்த எலும்பு முறிவுகள் போன்றவை இதில் சாதாரணம். இதில் வீரர்கள் தங்கள் ஒரு கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும், மற்றொரு கையால் காளையைத் தொடக்கூடாது என்பது விதி.

3. கேவ் டைவிங் (Cave Diving):

Cave Diving
Cave DivingImg credit: AI Image

கடலுக்கு அடியில் இருக்கும் குறுகிய குகைகளுக்குள் நீந்திச் செல்வதே கேவ் டைவிங். இது சாதாரண ஸ்கூபா டைவிங்கை விட பல மடங்கு சிக்கலானது. குகைக்குள் வழி தவறுவது, ஆக்சிஜன் சிலிண்டரில் கோளாறு ஏற்படுவது மற்றும் குகைக்குள் ஏற்படும் இருள் போன்றவை உயிரைப் பறிக்கும் காரணிகள். இதுவரை நூற்றுக்கணக்கான அனுபவம் வாய்ந்த வீரர்கள் கூட இந்தக் குகைகளுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

4. பிக் வேவ் சர்ஃபிங் (Big Wave Surfing):

Big Wave Surfing
Big Wave SurfingImg credit: AI Image

சாதாரண அலைகளில் சறுக்குவது எளிது. ஆனால், 20 முதல் 100 அடி உயரமுள்ள ராட்சத அலைகளில் சறுக்குவது தான் பிக் வேவ் சர்ஃபிங்.

ராட்சத அலைகள் விழும்போது, அது ஒரு பெரிய கட்டிடமே உங்கள் மீது விழுவது போன்ற அழுத்தத்தைத் தரும். வீரர்களை நீருக்கு அடியில் நீண்ட நேரம் அழுத்தி மூச்சுத்திணறச் செய்யும் அபாயம் இதில் உண்டு. பல நேரங்களில் அலைகளின் வேகத்தால் வீரர்கள் கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறைகளில் மோதிப் பலத்த காயம் அடைகின்றனர். ஆனால், தற்போது, ஏதேனும் விபரீதம் நடந்தால் மீட்பதற்கு பாதுகாப்பு குழு போட்டிகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

5. 'ஐல் ஆஃப் மேன் டிடி' (Isle of Man TT):

Isle of Man TT
Isle of Man TT Img credit: AI Image

குறிப்பாக 'ஐல் ஆஃப் மேன் டிடி' (Isle of Man TT) போன்ற பந்தயங்கள் மிகக் குறுகிய சாலைகளில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் நடத்தப்படுபவை. அதிவேகத்தில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்தால், சாலை ஓரத்தில் உள்ள சுவர்கள் அல்லது மரங்களில் மோதி உயிர் பிரிய வாய்ப்புள்ளது. 1907-ம் ஆண்டு முதல் இன்று வரை இந்த ஒரு பந்தயத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விளையாட்டுகள் கேட்பதற்கே அதிரடியாக இருந்தாலும், இதில் ஈடுபடுபவர்கள் முறையான பயிற்சியும், பாதுகாப்பு உபகரணங்களையும் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

உங்களுக்கு இந்த விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com