3 போட்டி கொண்ட தொடரா? ரோகித் கருத்துக்கு கம்மின்ஸ் பதில்!

3 போட்டி கொண்ட தொடரா? ரோகித் கருத்துக்கு கம்மின்ஸ் பதில்!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தவேண்டும் என்று ரோகித் சர்மா கூறியதற்கு, ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் பதில் அளித்துள்ளார்.

நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் கடைசிநாளில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி நிலையில், இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஐசிசியின் அனைத்துவிதமான கோப்பைகளையும் வென்ற முதல் அணியாக ஆஸ்திரேலியா அணி மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையும் படைத்துள்ளது.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ரோகித் சர்மா உலக டெஸ்ட் போட்டி குறித்த தனது கருத்தை பதிவு செய்தார். அதில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கு முன் எங்களுக்கு சரியான காலஅவகாசம் கிடைக்கவில்லை. இந்த சாம்பியன் ஷிப் போட்டிக்காக 2 வருடங்களாக பல போட்டிகளில் விளையாடி, வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது ஒரே டெஸ்ட் போட்டியாக நடத்துவது சரியாக இருக்குமா என்று கூறமுடியவில்லை. அதற்குப் பதிலாக 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தி, அதன்மூலம் வெற்றியாளரை தேர்வு செய்யலாம் என்று கூறியுள்ளார்.

ரோகித்தின் இந்த கருத்து குறித்து ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸிடம் கேட்டபோது, நாங்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றி உள்ளோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை 3 போட்டிகள் மட்டுமல்ல, 16 போட்டிகள் கொண்ட தொடராகவும் நடத்தலாம். ஆனால் ஒலிம்பிக்கில் ஒரே ஆட்டத்தின் மூலம்தான் யார் சாம்பியன் என்பதை தேர்ந்தெடுத்து பதக்கத்தை வழங்குவார்கள் என்று கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com