தினமும் ஒரு வெள்ளரிக்காய் போதும்.. இவ்வளவு நன்மை இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!

தினமும் ஒரு வெள்ளரிக்காய் போதும்.. இவ்வளவு நன்மை இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!

காய்கறிகளிலேயே அனைவருக்கும் மிகவும் பிடித்த காய் வெள்ளரிக்காய். இந்த வெள்ளரிக்காயில் பல நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும், வெள்ளரிக்காய் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. உங்கள் உடலுக்குத் தேவையான உயிர் கொடுக்கும் திரவமாக நீர் கருதப்படுகிறது. உடலில் தேவையான அளவை விட குறைவான நீர் இருப்பு நீரிழப்புக்கு காரணமாகிறது, இதனால் நீங்கள் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

தினமும் ஒரு வெள்ளக்கரிக்காயை சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முடியும். வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாக உள்ளன. நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், உடல் எடை கிடுகிடுவென குறைய உதவி செய்யும்.

மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்கள் தினமும் வெள்ளக்காரிக்காயை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையை போக்கி விடும். மேலும், நமது குடல் இயக்கங்களை சீராக்க வைத்துக் கொள்ள வெள்ளரிக்காய் வழிவகை செய்யும்.

தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால், வெள்ளரிக்காயில் உள்ள கால்சியம், நமது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். எலும்பு முறிவுகளின் அபாயங்களை நீக்கும். வெள்ளரிக்காய்யில் உள்ள கால்சியம் எலும்பு தசைகளை சரியாக இயங்க உதவி செய்யும்.

தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உங்கள் சருமம் பளபளப்பாக மின்னும். சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், வெள்ளரிகளை சாப்பிட்டு வாருங்கள். உங்களை சருமத்தை ஒளிரச் செய்ய முகத்தில் தினமும் வெள்ளரிக்காய் சாற்றை பூசி வரலாம்.

தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவி செய்யும். இதனால், சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com