

கடந்த 148 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இதுவரை இரண்டே இரண்டு போட்டிகளில் மட்டுமே ஒரு அபூர்வ நிகழ்வு நடந்துள்ளது. அந்தப் போட்டிகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காண்போம்.டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் சதம், இரட்டைச் சதம் எனப் பல சாதனைகளைப் படைத்திருப்பார்கள். ஆனால், ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு அணிகளையும் சேர்த்து, நான்கு தொடக்க வீரர்களும் (Opening Batsmen) சதம் அடித்தது வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே நடந்துள்ளது.
1.போர்ட் ஆப் ஸ்பெயின் டெஸ்ட் ( 1948)
இதில் நான்கு அறிமுக வீரர்களில் ( இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுக்கள் அணி தலா இருவர் அறிமுகம் ஆனார்கள் இந்த டெஸ்டில் ) இரண்டு வீரர்கள் சதம் எடுத்தனர். மூன்றாவது வீரர் மூன்று ரன்களில் சதம் தவற விட்டார்.அந்த இரண்டு வீரர்களுக்கும் ஒரு ஒற்றுமை. இருவரும் சதம் எடுத்தது இந்த ஒரே ஒரு டெஸ்டில் மட்டும் தான்.இந்த டெஸ்டில் தான் முதன் முறையயாக நான்கு ஒப்பனிங் வீரர்களும் தனி தனியாக சதம் எடுத்து சாதனை புரிந்தனர்.
இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் பில்லி கிரிப்பித் 15 பவுண்டரிகள் அடித்து எடுத்த ரன்கள் 140 முதல் இன்னிங்சில்.
இவரது விக்கெட்டை கைப் பற்றியவர் மேற்கு இந்திய தீவுக்கள் அணியின் அறிமுக வீரர் பிரேங்க் ஒர்றேல்.இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்சில் அடுத்த துவக்க ஆட்டக்காரர் ஜாக் ராபர்ட்சன் தனது சதத்தை பதிவு செய்தார். இவரும் 15 பவுண்டரிகள் எடுத்தார். இவரது ஸ்கோர் 133 ரன்கள்.
மேற்கு இந்திய தீவுக்கள் அணி தரப்பில் முதல் இன்னிங்சில் சதங்கள் எடுத்து அசத்திய துவக்க வீரர்கள் ஜோடி அறிமுக வீரர் ஆண்டி காந்தேையுமே ( Andy Ganteaume ) மற்றும் ஜார்ஜ் கரெவ்.13 பவுண்டரிகள் அடித்த ஆண்டி காந்தேையுமே 112 ரன்கள் குவித்தார்.16 பவுண்டரிகள் எடுத்த ஜார்ஜ் கரெவ் ஸ்கோர் 107 ரன்கள்.
ஆக மொத்தம் நான்கு துவக்க வீரர்கள் தலா ஒரு சதம் பதித்த முதல் டெஸ்ட் மேட்ச் இது என்ற சாதனையுடன் டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் இடம் பெற்றது.
இந்த டெஸ்டில் அது வரையில் எந்த ஆட்டத்திலும் ( முதல் தர ஆட்டங்கள் உட்பட ) துவக்க வீரராக களம் இறங்காத விக்கெட் கீப்பர் ஆன பில்லி கிரிப்பித் துவக்கம் செய்து (make shift opener )அவரது இந்த அறிமுக டெஸ்டிலேயே வாழ்க்கையில் தனது முதல் மற்றும் டெஸ்டுகளின் ஒரே ஒரு சதத்தைப் பதிவு செய்தார். இவர் ஆடியது 3 டெஸ்டுக்கள் மட்டுமே.
மேற்கு இந்திய தீவுக்கள் அணியின் துவக்க வீரர் ஆண்டி காந்தேையுமே நிலைமை இன்னும் பரிதாபம்.இவரது இந்த அறிமுக டெஸ்ட்டே இவரது முதல் மற்றும் கடைசி டெஸ்ட் மேட்சாக அமைந்தது.இவரது சராசரி ரன்கள் 112. டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் அதிக பட்சமானது. குறைந்த பட்ச டெஸ்டுக்கள் விளையாடாததால் இந்த சராசரி கணக்கில் எடுத்துக் கொள்ள படவில்லை. அதனாலேயே ஸர் டான் பிராட்மன் முதலிடத்தில் இருக்கிறார்.டிரா ஆன இவரது அறிமுக டெஸ்டில் ஆண்டி காந்தேையுமே ஆடியது ஒரே ஒரு இனிங்க்சில் மட்டும் தான்.
மற்றோரு அறிமுக வீரரான பிரேங்க் ஒர்றேல் எடுத்தது 97 ரன்கள். 3 ரன்கள் வித்தியாசத்தில் அறிமுக டெஸ்டில் சதம் பதிவு செய்வதை நழுவ விட்டார்.
இது தான் புகழ் பெற்ற மூன்று டபிள்யூ ( Famous Three W 's ) வீரர்கள் ஆன வால்காட், வீக்ஸ், ஒர்றேல் சேர்ந்து ஆடிய முதல் டெஸ்ட் மேட்ச் ஆகும்.
அறிமுக டெஸ்டில் சதத்தை தவற விட்டாலும் பிரேங்க் ஒர்றேல் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்தது இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் பில்லி கிரிப்பித் விக்கெட்டை தான்.அது மட்டும் அல்லாமல் சிக்ஸர் அரிதாக இருந்த அந்த கால கட்டத்தில் இந்த குறிப்பிட்ட டெஸ்டின் ஒரே சிக்சரை அடித்தது பிரேங்க் ஒர்றேல்.
2.ராவல்பிண்டி டெஸ்ட் (2022):
ரவால்பிண்டியில் நடைப் பெற்ற இந்த இங்கிலாந்து , பாகிஸ்தான் டெஸ்ட் இரண்டாவது டெஸ்ட் ஆகும் நான்கு துவக்க வீரர்களும் சதங்கள் அடித்து சாதித்த டெஸ்ட்.
இங்கிலாந்து துவக்க வீரர்கள் சாக் கிரவ்லே (122 ), பென் டக்கெட் (107) மற்றும் பாகிஸ்தான் துவக்க வீரர்கள் அப்துல்லாஹ் ஷாபிக்யூ ( 114), இமாம் உல் ஹூக் ( 121 ) சாதனை புரிந்தனர்.இவர்கள் தங்கள் தங்கள் அணியின் முதல் இன்னிங்சில் இந்த சதங்களை பதிவு செய்தது குறிப்பிட தக்கது.
இந்த டெஸ்ட் மொத்தம் 7 சதங்களைக் கண்டது.இவர்களை தவிர சதம் எடுத்தவர்கள் இங்கிலாந்து அணி விக்கெட் கீப்பர் ஒல்லி போப் (108 ) முதல் இன்னிங்சின் முதல் மூன்று ஆட்டக்காரர்கள் வரிசையாக சதங்கள் எடுத்தனர் மற்றும் ஒரு இங்கிலாந்து வீரர் ஹார்ரி ப்ரூக் (153) ஒரு பாகிஸ்தான் வீரர் கேப்டன் பாபர் அசம் (136).
இங்கிலந்து அணி முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் ( 657 ) எடுத்து 78 ரன்கள் லீட் எடுத்து இருந்தும் பாகிஸ்தான் அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற்றது 74 ரன்கள் வித்தியாசத்தில்.மொத்தம் 1768 ரன்கள் கண்ட இந்த டெஸ்டில் பவுண்டரிகள் எண்ணிக்கை 214. இரண்டு அணிகளும் தலா 107 பவுண்டரிகள் சேர்த்தன.
இங்கிலாந்து அணியினர் 15 மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் 11 சிக்ஸர்கள் அடித்தனர்.
இந்த இரண்டு டெஸ்டுக்களுக்கும் (1948 போர்ட் ஆப் ஸ்பெயின் , 2022 ராவால் பிண்டி ) இடைப் பட்ட கால கட்டத்தில் 1986 சிட்னி டெஸ்டும் இரண்டு அணி துவக்க வீரர்கள் சதங்கள் குவித்து சாதனை பட்டியலில் இடம் பெற்று இருக்க வேண்டியது.சாதிக்க வேண்டிய தகுதியை கிட்ட தட்ட நெருங்கி இழந்தது.
இந்திய துவக்க வீரர்கள் ஸ்ரீகாந்த் ( 116 ) சுனில் கவாஸ்கர் ( 172 ) மற்றும் ஆஸ்திரேலிய துவக்க வீரர்கள் டேவிட் பூன் (131) ஜியோப் மார்ஷ் ( 92 ) ரன்கள் எடுத்தனர்.
8 ரன்கள் வித்தியாசத்தில் ஜியோப் மார்ஷ் அவரது சதத்தை முதல் இன்னிங்சில் தவற விடாமல் இருந்திருந்தால் இந்த டெஸ்டின் நான்கு துவக்க வீரர்களின் சதங்கள் சாதனையும் இடம் பிடித்து இருக்கும்.