எங்கள் ரோல் மாடல் 75 வயது மாமி!

எங்கள் ரோல் மாடல் 75 வயது மாமி!

Published on

எங்கள் எதிர் வீட்டு மாமி கிரிஜா ராகவனுக்கு வயது எழுபத்தைந்து.  ஆனாலும் மனதளவிலும் உடலவிலும் உற்சாகமாக இருக்கிறார்  அவரது ஆகாரம். ஆன்மிக நாட்டம். நடைபயிற்சி ஆகியவை எல்லாமே சிஸ்டமேடிக் ஆக இருக்கும். . காலையில் எழுந்ததும் விளக்கேற்றி வழிபடுதல், பின்பு ஆவியில் வேக வைத்த டிபன் (தட்டுஇட்லி இடியாப்பம்), பாதாம் சேர்த்த இட்லி பொடி தான் சாப்பிடுவார்.காபி ,டீ குடித்தாலும் பழங்களும் ,ராகி கூழும் உண்டு. மதியம், கோதுமை சாதம்,.. சைடு டிஸ்ஸில். காய்கறி கீரைகள் இல்லாமலிருக்காது.

மாலையானால் நடை பயிற்சி.. ஆன்மிக வகுப்பு! இதையெல்லாம் 25 வருடமாக இடைவிடாது செய்கிறார். சமீபத்தில் கல் தட்டி விழுந்ததில் காலில் சிறு ஆப்பரேஷன் ஆனபோதும் அவர் நடைபயிற்சியை விடவில்லை.  மேலும் டி,வி ப்ரோகிராம் கொடுப்பது. விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது. டியுஷன் எடுப்பது, பத்திரிகைகளுக்கு எழுதவது என்று மனதை உற்சாக வைத்துக் கொள்வார். இன்னொரு விஷ்யம் – அவர் மங்கையர் மலரின் நீண்ட வருட வாசகி .இவரது எழுத்துக்கள் ம.மலரில் வெளி வந்திருக்கின்றன்.எங்கள் தெருவாசிகளுக்கு இவரே ரோல்மாடல்.

இதோ நானும் அவரும் இனணந்த புகைப்படம் .சந்தன கலர் புடவையில் .என் பேரன்களை (ரஞ்சன் டாடா குமார். ரத்தன் டாடாகுமார்) ஆசிர் வதிக்கிறாரே அவர் தான் கிரிஜா ராகவன்.

-ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்

logo
Kalki Online
kalkionline.com