மாதிரி படம்
மாதிரி படம்

பகலில் தூங்குவது நல்லதா.. கெட்டதா? தெரிந்து கொள்ளுங்கள்!

பலருக்கும் இரவில் தூக்கம் வருவதை விட பகலில் தூக்கம் அதிகமாகவே வரும். நம் பள்ளி பருவத்திலேயே சாப்பிட்ட பிறகு ஆசிரியர் பாடம் நடத்தும் போது ஒரு சுகமான தூக்கம் வரும். அப்படி மதிய நேரங்களில் தூங்கினால் தொப்பை வரும், உடலுக்கு கெடுதி என பலரும் கூறுவார்கள். ஆனால் உண்மையில் பகலில் தூங்குவது நல்லதா என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதுகுறித்து சமீபத்தில் லண்டன் பல்கலைக்கழக ஆய்வகம் நடத்திய ஆய்வில் பகலில் தூங்குவது நல்லது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் டி.என்.ஏ.வில் உள்ள 97 துணுக்குகள், நம்மை தூங்குபவர்களாகவோ அல்லது சுறுசுறுப்பானவர்களாகவோ செயல்பட வைக்கும். அதனை வைத்து 40 முதல், 69 வயதுள்ள 35,000 நபர்களிடம் மரபணுச் சோதனையை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.

அதில், பிற்பகலில் தூங்குபவர்களின் மூளை பெரிதாவதைக் கண்டறியப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் 20- 30 நிமிடங்கள் வரை உறங்குவதுதான் உடலுக்கு நல்லது என்பதும் இதில் தெரிய வந்துள்ளது. தூங்காதவர்களை விட பகலில் சிறிது நேரம் உறங்குபவர்களின் வயது 2.6 முதல், 6.5 வருட வயது முதிர்வைக் குறைக்கிறது.

உடல் எடையைக் குறைப்பது, உடற்பயிற்சி செய்வதைவிட, பகல் நேரத்தில் சிறிது உறங்குவது ஏராளமான பலன்களைத் தரும். சரியான நேரத்திற்கு உறங்குவதன் மூலம், வயது முதிர்வால் ஏற்படும் முழு மறதி நோயை தவிர்க்கலாம். தூக்கமின்மை, சரியான நேரத்திற்கு உறங்காமலிருப்பது போன்றவை, மூளையின் செயல்பாட்டைச் சிதைப்பதோடு மட்டுமில்லாமல் மூளை செல்களையும் பாதிக்கும்.இனிமேல் பகல் நேரத்தில் சிறுது தூக்கம் போட்டு பல நன்மைகளை பெறலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com