அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்து அணியை திக்குமுக்காடச் செய்த இந்திய வீரர்!

Aakash Deep
Aakash Deep

இங்கிலாந்து, இந்திய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று காலை ராஞ்சியில் தொடங்கியது. 24 ஓவர்கள் மட்டுமே சென்றிருந்த நிலையில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் உள்ளது. அதில் மூன்று விக்கெட்டுகளை இந்திய அணியின் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் எடுத்து அசத்தியிருக்கிறார்.

ராஞ்சியில் நடைபெறும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் மைதானத்தை இந்திய அணி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றியுள்ளது என்று இங்கிலாந்து அணி புலம்பியது. இதுகுறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் "இதுபோன்ற ஆடுகளத்தை நான் பார்த்ததேயில்லை" என்று கூறினார். மேலும் ஆடுகளத்தில் விரிசல் உள்ளதால் இது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எண்ணிய இங்கிலாந்து அணி அதற்கேற்றவாரு பேட்டிங் உத்திகளை மாற்றியது. ஆனால் 'லிஸ்ட்லையே இது இல்லையேப்பா' என்ற அளவிற்கு இந்திய அணி ஒரு புது ட்விஸ்ட் கொடுத்தது.

ஆம்! இந்திய அணியின் அறிமுக வீரரான ஆகாஷ் தீப்பை பவுலிங்கில் இறக்கியது. ஆகாஷ் தீப் இங்கிலாந்து அணி எதிர்ப்பார்த்த சுழற்பந்தை வீசாமல் வேகப்பந்தை தொடர்ந்து வீசினார். இதனால் இங்கிலாந்து அணி சிறிதும் எதிர்பாரா விதமாக போட்டி அமைந்தது. அந்தவகையில் ஆகாஷ் தீப் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்து அணியை திக்குமுக்காட செய்தார். ஷார்ட் பால், ஸ்டம்ப் நோக்கி பந்து வீசுவது என தனது பந்துவீசும் ஸ்டைலை மாற்றி மாற்றி வீசியதால் இங்கிலாந்து அணியால் கணிக்கவே முடியாத அளவிற்கு ஆட்டம் அமைந்தது.

இருப்பினும் ஆகாஷ் தீப் 7 ஓவர்களில் 2 நோ பால்கள் வீசினார். இது மட்டுமே அவரின் மைனஸாக இருந்தது. அதேபோல் நேற்று ராஞ்சியில் மழைப் பெயததால் சிராஜ் சற்று  பந்தை ஸ்விங்க் செய்தார். ஆனால் அது எந்த பயனையும் அளிக்கவில்லை. இதனால் அவர் 4 ஓவர்களில் மட்டும் 27 ரன்களை விட்டுக்கொடுத்தார். அந்தவகையில் இந்திய அணியில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்து இங்கிலாந்து அணிக்கு டஃப் கொடுக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
குட்டிக் குட்டி ரெட் கப் கேக்குகளை வீட்டிலேயே செய்யலாம் வாங்க!
Aakash Deep

இந்திய அணி மைதானத்திற்கு ஏற்றவாரு சுழற்பந்தை மட்டுமே வீசும் என்று கணித்த இங்கிலாந்து அணிக்கு இது ஒரு மாபெரும் ஏமாற்றமாகவே அமைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com