சொதப்பிய பௌலர்! ஒரு பந்தில் 18 ரன்கள் அடித்த அதிசய வீடியோ!

சொதப்பிய பௌலர்! ஒரு பந்தில் 18 ரன்கள் அடித்த அதிசய வீடியோ!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

டிஎன்பிஎல் 2023 தொடர் போட்டிகள் தற்போது நடந்துவரும் நிலையில் சில நேரங்களில் எதிர்பாராத விஷயங்களும் நடந்து வருகின்றன. அந்தவகையில் தற்போது ஒரு பௌலர் வீசிய ஒரு பந்தில் 18 ரன்கள் அடிக்கப்பட்டது ரசிகர்களுக்கிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேப்பாக் சூப்பர் கில்லிஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே கோயம்புத்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது.

இதையடுத்து ஆட்டத்தின் கடைசி ஓவரை சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வீரர் அபிஷேக் தன்வர் வீச, சஞ்சய் யாதவ் பேட்டிங் செய்தார். அந்த ஓவரின் முதல் 5 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் கடைசி பந்தை வீசினார். அந்த பந்தில் சேப்பாக் அணியின் சஞ்சய் யாதவ் க்ளீன் போல்ட் ஆனார். ஆனால் அந்த பந்து நோபால் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் பந்து வீச, அதுவும் நோபால் என்று அறிவிக்கப்பட, அந்த பந்தில் சிக்ஸர் அடிக்கப்பட்டது. அடுத்து மீண்டும் பந்து வீச, அதில் 2 ரன்கள் எடுக்கப்பட, அதுவும் நோபால். அடுத்த பந்து வீச வைட், இறுதியாக கடைசி பந்தை வீச, அதில் சிக்ஸர் அடிக்க, ஆக மொத்தம் கடைசி பந்தில் மட்டும் (NB, 6NB, 2NB, WD, 6) 18 ரன்கள் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ...

logo
Kalki Online
kalkionline.com