பார்முலா 1 கார் பந்தயங்களில் அணியப்படும் ஹெல்மெட்டும் நாம் அணியும் ஹெல்மெட்டும் ஒண்ணா?

 கார் பந்தயம் ...
கார் பந்தயம் ...

பார்முலா 1 அல்லது F1 என்பது கார் ரேஸ் தொடராகும். இது ஆண்டுதோறும், பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் இடம் பெறுகின்ற ஒரு ஸ்போர்ட்ஸ் தொடர் நிகழ்வாகும். FIA (Federation International de Automobile) என்ற அமைப்பு இதை நடத்துகிறது. 10 அணிகள், அணிக்கு இரண்டு ஓட்டுனர்கள் என்ற வகையில் 20 ஓட்டுனர்களின் பங்கேற்பு இருக்கும்.

பார்முலா 1 அல்லது F1 கார் ரேஸ் தொடர் குறித்து 12 சுவாரஸ்யத் தகவல்கள்...

1. 1920 - 30களில் நடைபெற்ற ஐரோப்பிய கார் பந்தயப் போட்டிகளே பார்முலா-1 போட்டிகளின் முன்னோடிகளாகும். அவை இரண்டாம் உலகப் போரின்போது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தன. பின்னர் 1950-இல் பார்முலா-1 போட்டி முதல்முறையாக இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சுற்றில் நடைபெற்றது.

2. 1950-ல் முதல் பார்முலா 1 போட்டித் தொடரை இத்தாலியின் ஜிசப் பரின வென்றார். முதல் தொடரில் அர்ஜெண்டினாவின் ஜுவான் மானுவேல் பேஞ்சியோ-வை வென்று கோப்பையைக் தன்வசப்படுத்திக்கொண்டார்.

3.  பார்முலா-1 பந்தயமானது உலக அளவில் ஆண்டுதோறும் 600 மில்லியன் தொலைக்காட்சி பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது.

4. பார்முலா 1 கார் பந்தயத்தில் பங்குபெற கார் ஓட்டத் தெரிந்தால் மட்டுமே போதாது. அதற்கு ஒருவர் பதினெட்டு வயது நிரம்பியவராக இருக்க வேண்டியது அவசியமாகும்.

5. இந்தியாவில் 2011 முதல் 2013 வரை நடந்த மூன்று பார்முலா 1 போட்டிகளிலும் ரெட் புல் அணியை சேர்ந்த ‘செபாஸ்டியன் வெட்டல்’ என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

6. இந்தியாவில் ஃபார்முலா-1 பந்தயங்கள் நுழைவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது ‘பங்கு புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்’ எனப்படும் கார் பந்தய களம்தான். ஜேபி ஸ்போர்ட் இன்டர்நேஷனல் நிறுவனம்தான் இதனை அமைத்தது. ரூ.2,000 கோடி முதலீட்டில் 875 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப் பட்டுள்ளது. பந்தய களம் 14 மீட்டர் உயரத்திலும் மற்றும் அதன் ஒரு சுற்று 5.14 கிமீ நீளம் கொண்டும் உருவாகியுள்ளது.

 கார் பந்தயம் ...
கார் பந்தயம் ...

7.   பார்முலா 1 பந்தயத்தின்போது டிராக்கில் காரை எந்தவொரு காரணத்துக்காகவும் நிறுத்தக்கூடாது. டிராக்கின் தன்மை உள்ளிட்டவை குறித்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து காரில் பொருத்தப்பட்டிருக்கும் டிரான்ஸ்மீட்டர் மூலம்  டிரைவருக்கு உடனுக்குடன் தகவல்கள் கொடுத்த வண்ணம் இருப்பார்கள்.

8.  ஃபார்முலா- 1 கார்கள் அதிகபட்சம் மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டவை. 0-100 கிமீ வேகத்தை வெறும் 1.7 வினாடிகளிலும், 100-200 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளிலும் எட்டும் அசாத்திய வல்லமை இதற்கு உண்டு. வெறும் 9 வினாடிகளுக்குள் 300 கிமீ வேகத்தையும் தாண்டி செல்லும்.

9. கார் பந்தயம் மற்றும் பயிற்சியின்போது ஒரு அணி சராசரியாக 2,00,000 லிட்டர் எரிபொருளை ஒரு சீசனில் பயன்படுத்துகிறது. இதன் மதிப்பு மட்டுமே ரூ.1.52 கோடியாகும்.

10.பந்தயக் கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் டயர்கள் 16,000 கிமீ வரையிலோ அல்லது கூடுதலாகவும் செல்லும் வகையில் இருக்கும். ஆனால், பார்முலா-1 கார்களில் பொருத்தப்படும் டயர்கள் வெறும் 200 கிமீ வரை செல்லும். பின்னர் புதிய டயர் மாற்ற வேண்டும்.

11. பார்முலா 1 பந்தயத்தின்போது, பங்கேற்கும் அனைத்து கார்களும் நியமிக்கப்பட்ட பிட் ஸ்டாப் என்ற இடத்தில் நிறுத்தப்படும். பார்முலா 1 பிட் ஸ்டாப்புகளில் உள்ள வல்லுநர்கள் பொதுவாக 3 வினாடிகளில் டயரை மாற்றுவார்கள்.

12.  ஒவ்வொரு போட்டியிலும் முதலாவது இடத்தைப் பிடிக்கும் டிரைவருக்கு 25 புள்ளிகளும், 2ம் இடத்தை பிடிக்கும் டிரைவருக்கு 18 புள்ளிகளும், 3ம் இடத்தை பிடிக்கும் டிரைவருக்கு 15 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.

ஹெல்மெட்டுகள் ...
ஹெல்மெட்டுகள் ...

சரி...  பார்முலா 1 கார் பந்தயங்களில் அணியப்படும் ஹெல்மெட்டும் நாம் அணியும் ஹெல்மெட்டும் ஒண்ணா?

ரு மணிநேரத்தில் 360 கி.மீ. வேகத்தில் இந்த கார்கள் பறக்கும் என்பதால் ஓட்டுனர்கள் மிகுந்த பாதுகாப்புடன் பங்கேற்பது மிக மிக அவசியம். அதிலும் அவர்கள் அணியும் ஹெல்மெட்டுகள் மிக மிக ஸ்பெஷலானவை. ஒவ்வொரு போட்டியாளரின் தலையும் அளவு எடுக்கப்பட்டு அதற்குத் தகுந்தாற்போல் ஹெல்மெட் தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக அதை அணியும்போது அவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். விபத்து நடக்கும்பொது அது சட்டென்று கீழே விழுந்து விடாது. தலைக்கும் ஹெல்மெட்டுக்கும் இடைவெளி இருக்காது என்பாதால் தீ விபத்து ஏற்பட்டாலும் நெருப்பு தலைப்பகுதிக்குள் நுழையாது.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு திடமான மனம் இருக்கா? அப்ப நீங்க அதிர்ஷ்டசாலி!
 கார் பந்தயம் ...

ஹெல்மெட்டில் உள்ள ‘வைசர்’ (அதாவது கண்களுக்கு முன் உள்ள பகுதி) உறுதியானதாகவும் இருக்க வேண்டும், பார்வையைச் சிறிதும் மறைக்காததாகவும் இருக்க வேண்டும். இந்த ‘வைசர்’ பல படலங்களைக் கொண்டதாக இருக்கும். மேல் படலத்தில் தூசியோ அல்லது எண்ணெய்யோ படிந்தால் அந்தப் படலத்தை மட்டுமே நீக்கிவிட முடியும். ஹெல்மெட்டின் உட்புறம் ஸ்பெஷல் குஷன்கள் இருக்கும். இது வசதி, பாதுகாப்பு இரண்டையும் அளிப்பதாக இருக்கும்.

இந்த ஹெல்மெட் போட்டியாளரின் முகம் முழுவதையுமே மறைப்பதாக இருக்கும். எனவே போட்டியின் போது அவர் ஏதேனும் திரவத்தைக் குடிப்பதற்கு வசதியாக புனல் போன்ற ஒரு அமைப்பு இதன் வாய்ப்பகுதியில் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com