பலாப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!

பலாப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!
Published on

பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, பி, சிக்களும் உள்ளன. தவிர கால்சியம், , பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன.

பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.

பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பலாக்காயை சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும். பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது. பலாபழம் மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும். கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது.

தூக்கமின்மை போன்ற தூக்கக் கோளாறுகளிலும் பலாப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பலாப்பழத்தில் உள்ள மெக்னீசியம் உடலில் உள்ள நரம்பியக்கடத்திகளின் அளவைக் கட்டுப்படுத்தி நன்றாக தூங்க செய்கிறது.

பலாப்பழம், தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுத்து, சருமத்தை இளமையோடு பராமரிக்க உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com