மாற்றுத்திறன் பேட்மின்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகாவுக்கு அர்ஜூனா விருது!

ஜெர்லின் அனிகா
ஜெர்லின் அனிகா
Published on

ஜெர்லின் அனிகாவிற்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டு இருப்பது மாற்று திறனாளிகளுக்கு மட்டுமல்ல அனைவரும் சாதிக்க முடியும் என்பதற்கு முன் உதாரணம் என அவர் தந்தை ஜெயரட்சகன் தெரிவித்துள்ளார்.

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ஜெயரட்சகன், லீனா தம்பதி மகள் ஜெர்லின் அனிகா(17). செவித்திறன் குறைபாடு உள்ளவர். எட்டு வயது இருக்கும் பொழுது அவருடைய தந்தையுடன் பேட்மிட்டன் விளையாட துவங்கினார்.

பொதுவாக செவித்திறன் குறைபாடு உள்ள உள்ளவர்கள் பேட்மின்டன் விளையாடுவது சிரமம். இவர்களுக்கு காது கேட்காது என்பதால் எதிரில் உள்ளவர்கள் பந்தை(ஷட்டில்) அடிக்கின்ற சத்தம் அவர்களுக்கு கேட்காது எனவே முழுமையாக கவனச்சிதறல் இல்லாமல் அந்த விளையாட்டில் கவனம் செலுத்தினால் மட்டுமே பந்தை எதிர் நோக்கி விளையாட முடியும்.

அவருடைய பயிற்சியாளர் சரவணன் என்பவர் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்தி கற்றுக் கொடுத்திருக்கிறார். சீனாவில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் தங்க பதக்கம் வென்ற அனிகா, அதனை தொடர்ந்து பாரா ஒலிம்பிக்கில் 3 பதக்கம் வென்று சாதித்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் சார்பாக அர்ஜுனா விருது இருக்கு ஜெர்லின் அனிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெர்லின் தந்தை பேசும் போது,இதை எவ்வளவு கொண்டாடுகிறோம் என்பது கூட தெரியவில்லை.

தினமும் 8 முதல் 10 மணி நேரம் பயிற்சி மேற்கொள்வார். முழுக்க ஈடுபாடு காரணமாக ஒலிம்பிக்கில் 3 மெடல் பெற்றார் . உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அவரது எண்ணம்.. மாற்றுதிறனாளி மட்டுமில்லை யாரும் எங்கிருந்தாலும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த விருது முன் உதாரணம்" என தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com