
நன்மைகள் :
பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும்.
குழந்தைகளுக்குக் கொஞ்சம் ஓம நீரில் சிறிதளவு பெருங்காயப் பொடியைக் கலந்து கொடுத்தால் மாந்தக் கழிச்சலை நீக்கி பசியைக் கொடுக்கும்.
மாதவிடாய் சரியாக வராத பிரச்னையையும், அதிக ரத்தப் போக்கு இல்லாமல் லேசாக வந்து செல்லும் பிரச்னையையும் இது சீர் செய்யும். ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது.
எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால் பல் வலி நீங்கும்.
வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் சிறிதளவு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது. அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து.
அரை ஸ்பூன் பெருங்காயத் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இது உங்கள் எடை குறைப்புக்கு உதவும்.
பெருங்காயத்தை சுடுதண்ணீரில் கலந்து குடிப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கனிசமாகக் குறைகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெருங்காயம் நரம்பு உந்தியாக செயல்படும். எனவே இதை நரம்பு தளர்ச்சி நோய், தசை வலிப்பு, மயக்க நிலை மற்றும் இதர நரம்பு சீர்குலைவுகளுக்கும் பயன்படுத்தலாம்.
சரும சிகிச்சைக்கு உகந்ததாக இது விளங்குகிறது. இதை சருமத்தின் மேல் நேரடியாக தடவினால், தோல் தடிப்பு மற்றும் தோல் காய்ப்பு நீங்கும்.
பெருங்காயத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின், நமது கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும்.
சுவாச குழாய் புண்களுக்கு பயன்படுத்தப்பட்ட பழமையான மருந்தும் பெருங்காயம்.
கால் ஸ்பூன் பெருங்காயத்தை நீர் மோரில் கலந்து குடித்தால், கடுமையான வயிற்று வலி கூட, உடனே சரியாகும்.
பெருங்காயத்தில் உள்ள கவ்மரின் என்ற பொருள், இரத்தத்தை மெலிவூட்டி இரத்த உறைதலை தடுக்கும்.