ஆசிய கோப்பை: சுப்மன் கில் சதம் வீண்! வங்கதேசத்திடம் வீழ்ந்தது இந்தியா!

IND vs BAN
IND vs BAN

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவரும் நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வீழ்ந்தது இந்தியா.

இந்திய அணியின் சுப்மன்கில் சிறப்பாக ஆடி 121 ரன்கள் சேர்த்த போதிலும் இந்திய அணி வெற்றிவாய்ப்பை இழந்தது. 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா 49.5 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த போட்டியில் விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட 5 வீர்ர்களுக்கு ஓய்வுகொடுக்கப்பட்டு அதற்கு பதிலாக இளம் வீர்ர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனாலும் வங்கதேச வீர்ர்களின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணியினர் வீழ்ந்தனர்.

ஆல்ரவுண்டரான அக்ஸர் படேல் சற்று தாமதமாக களம் இறங்கிய போதிலும் 42 ரன்களில் அவுட்டானார்.

இந்தியாவை வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிகண்டது. வங்கதேசத்துடன் நான்கு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய இந்தியாவுக்கு இது மூன்றாவது தோல்வியாகும்.

இந்திய வெற்றியின் மூலம் சுப்பர் 4 போட்டிகளில் வங்கதேசம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தானுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.

எனினும் இறுதிப் போட்டியில் வரும் 17 ஆம் தேதி இந்தியா. இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

வங்கதேச பந்துவீச்சாளர்களை தைரியமாக எதிர்கொண்டு விளையாடியது சுப்மன் கில்தான். அவர் 133 பந்துகளை எதிர்கொண்டு 121 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும்.

முதலில் விளையாடிய வங்கதேச அணி 265 ரன்கள் எடுத்தது. 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா களம் இறங்கியது. முதல் ஓவரிலேயே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.

இளம் வீர்ரான திலக் வர்மா டி20 சர்வதேச போட்டிகளில் சிறப்பாக ஆடிய அதே வேகத்தை ஒருநாள் சர்வதேச போட்டிகளில் காட்ட முடியவில்லை. அவர் 5 ரன்களில் தான்ஸிம் வீசிய பந்தில் வீழ்ந்தார்.

சுப்மன் கில்லுடன் கே.எல்.ராகுல் சேர்ந்து ஆட்டத்தை தொடங்கினார். இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்திய போதிலும் வீக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ஆன கே.எல்.ராகுல் நின்று ஆடமுடியாமல் மஹெதி ஹஸன் வீசிய பந்தை அடிக்க முற்பட்டு அவுட்டானார்.

அடுத்துவந்த இஷான் கிஷன் அதிக நேரம் நீடிக்கவில்லை. மஹெதி ஹஸன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூவாகி அவுட்டானார்.

சுப்மன் கில்லுடன் சேர்ந்து சூரியகுமார் இணைந்து மெல்ல மெல்ல ரன்கள் எடுக்க தொடங்கினார். வங்கதேச சுழற்பந்தை அவர் திறமையாக எதிர்கொண்டார். இருந்தபோதிலும் ஷாகிப் அலி ஹஸனின் பந்தை பவுண்டரிக்கு தூக்கி அடிக்க முற்பட்டபோது கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இந்த ஆண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக ஆடாத ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, மீண்டும் தமது திறமையை நிரூபிக்க தவறினார். ரஹ்மான் வீசிய பந்தை அடிக்க முற்பட்டபோது அவுட்டானார்.

 

எனினும் அக்ஸர் படேல் நின்று ஆடினார். அவரும்  சுப்மன் கில்லும் கூட்டாக 39 ரன்கள் எடுத்தனர். சதம் எடுத்த சுப்மன்கில் 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அடுத்துவந்த ஷர்துல் தாகுருடன் சேர்ந்து அக்ஸர் கூட்டாக 40 ரன்கள் எடுத்தார். 33 பந்துகளை சந்தித்த அக்ஸர் 42 ரன்கள் எடுத்த நிலையில் ரஹ்மான் பந்தை பவுண்டரிக்கு அனுப்ப முற்பட்டு கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

 

முன்னதாக, டாஸ் ஜெயித்த ரோகித் சர்மா, பீல்டிங்கை தேர்வுசெய்தார். இதையடுத்து வங்கதேசம் களத்தில் இறங்கியது. ஒரு கட்டத்தில் வங்கதேசம் 60 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

 

எனினும் கேப்டன் ஷாகிப் அல் ஹஸன் மற்றும் தெளஹித் ஹிரிதோய் இருவரும் கூட்டாக நின்று விளையாடி 91 ரன்கள் சேர்த்தனர். ஷாகிப் 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷர்துல் வீசிய பந்தில் அவுட்டானார்.

 

வங்கதேச அணி 160 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் அணி வீர்ர்களான நஸும் அகமது 44 ரன்களும், மஹெதி ஹஸன் 29 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை 50 ஓவர்களில் 265 என உயர்த்தினர்.

--------------

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com