சூப்பர் 4 ஆட்டத்தில் வங்கதேசத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றது.
வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹாரிஸ் ரவூப் மற்றும் நஸீம் ஷா இருவரும் சேர்ந்து 7 விக்கெட்டுகளை சாய்த்தனர். இமாம் உல் ஹக் மற்றும் முகமது ரிஸ்வான் அதிரடியாக ஆடி 50 ரன்களை குவித்தனர்.
ஹாரிஸ் ரவூப், இமாம் உல் ஹக் மற்றும் நஸீம் ஷா மூவரும் சிறப்பாக பேட் செய்தனர். பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. இதனால் சூப்பர் 4 ஆட்டத்தில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூப், நன்றாக பந்து வீசி 6 ஓவர்களில் 19 ரன்கள் மட்டும் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பந்துவீச்சின் வேகத்தை சமாளிக்க முடியாமல் வங்கதேச பேட்ஸ்மென்கள் திணறினர். இதைத் தொடர்ந்து வங்கதேசம் 40 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. நஸீம்ஷா 5.4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
வங்கேதச அணியினர் முதல் கட்டமாக 47 ரன்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் அடுத்த கட்டத்தில் 47 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 40 ஓவர்களில் அவர்களின் மொத்த ஆட்டமும் முடிந்தது.
கேப்டன் ஷாகிப் அலி ஹஸன் 53 ரன்களும், முன்னாள் கேடன் முஷ்பிகுர் ரஹீம் 64 ரன்களும் எடுத்தனர். ஆனாலும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மற்ற வீர்ர்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர்.
பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக் அதிரடியாக ஆடி 78 ரன்கள் எடுத்தார். இவருடன் சேர்ந்து விளையாடிய முகமது ரிஸ்வான் அரை சதம் எடுத்தார். இருவரும் சேர்ந்து கணிசமான ஸ்கோரை எட்டியதால் வெற்றி இலக்கு எளிதாக இருந்தது.
ஆசிய கோப்பையில் சூப்பர் 4 முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியுடன் தனது கணக்கை தொடங்கியுள்ளது. இனி பாகிஸ்தான் இந்தியா மற்றும் இலங்கையை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.