கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்!

கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்!

ந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தங்களது கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தாயார் மரியா கம்மின்ஸ் நேற்று முன் தினம் காலமானார். அவருக்கு தங்களது அஞ்சலி செலுத்தும் விதமாகவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

இது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ‘மரியா கம்மின்ஸ் காலமானதில் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் சார்பாக, பேட் கம்மின்ஸ் குடும்பத்தினர் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று தெரிவித்திருக்கிறது.

தனது தாயார் கடந்த சில வாரங்களாகவே கடுமையான நோயுடன் அவதிப்பட்டு வருவதாக தனது சக நண்பர்களுடன் தகவல் பகிர்ந்து வந்துள்ளார் பேட் கம்மின்ஸ். இந்த நிலையில்தான் அவரது தாயாரின் மரண சம்பவம் நிகழ்ந்துள்ளது. மரியா கம்மின்ஸுக்கு கடந்த 2005ம் ஆண்டு மார்பகப் புற்று நோய் இருந்தது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தோல்விக்குப் பிறகு சில மணி நேரங்கள் கழித்து, சிட்னியில் இருக்கும் தனது தாயுடன் இருக்க தாம் விருப்பப்படுவதாகக் கூறிவிட்டுக் கிளம்பி விட்டார் பேட் கம்மின்ஸ். மீதமிருக்கும் போட்டிகளுக்கு ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com