ஆஸி. பாட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து, பிரணாய், ஸ்ரீகாந்த், ரஜாவத்!

ஆஸி. பாட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து, பிரணாய், ஸ்ரீகாந்த், ரஜாவத்!

ஸ்திரேலியன் ஓபன் பாட்மிண்டன் சூப்பர் 500 போட்டியில் இந்திய வீரர்களான பி.வி.சிந்து, பிரணாய், கிடம்பி ஸ்ரீகாந்த், ரஜாவத் ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். ஐந்தாம் நிலை ஆட்டக்காரரான பி.வி.சிந்து, இந்த ஆண்டு பல்வேறு போட்டிகளில் முதல் சுற்றிலேயே தோல்வி கண்ட நிலையில், தற்போது மலேசியாவின் முகமது ஹபீஸ் ஹாஷிம் என்னும் புதிய பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அவர் இரண்டாவது சுற்றில் ஆகர்ஷி காஷ்யப்பை  21 - 14, 21 - 10 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை பதக்கம் வென்ற பி.வி.சிந்து, காலிறுதியில் நான்காம் நிலை ஆட்டக்காரரான அமெரிக்காவின்  பெய்வென் ஜாங்கை சந்திக்கிறார்.

ஆடவர் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தின் இரண்டாவது சுற்றில், கிடம்பி ஸ்ரீகாந்த், சீன தைபே வீரர் லீ யாங் சூவை 21 - 10, 21 - 17 என்ற செட் கணக்கில் வென்றார். மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை ஆட்டக்காரரான பிரணாய், சீன தைபே வீர்ர் யூ ஜென் சியை 21-19, 21-19, 21-13 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.

இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத்தும் சீன தைபே வீர்ர் டிஸு வெய் வாங்கை 21-8, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி வென்றார். எனினும், ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத் மற்றும் கிரன் ஜார்ஜ் இருவரும் தோல்வியைத் தழுவினர்.

மிதுன் மஞ்சுநாத், மலேசியாவின் ஜி ஜியா லீயிடம் 13 - 21, 21 - 12, 19 - 21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் கிரன் ஜார்ஜ், இந்தோனேசியாவின் அந்தோனி சினிசுகாவிடம் 15 - 21, 18 - 21 என்ற கணக்கில் எளிதில் வீழ்ந்தார்.

ஆடவர் பிரிவு காலிறுதியில் பிரணாய், அந்தோனி சினிசுகாவையும், ஸ்ரீகாந்த் சக இந்திய வீரர் ரஜத்தையும் சந்திக்கின்றனர்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்திய ஜோடியான டிரெஸ்ஸா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஜப்பானின் மயூ மட்ஸுமோடோ மற்றும் வாகனா நகஹாரா ஜோடியிடம் 10 - 21, 20 - 22 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com