ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டி; ஜோகோவிச்சுக்கு அனுமதி!

ஜோகோவிச்சு
ஜோகோவிச்சு
Published on

ஆஸ்திரேலிய ஓப்பன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதற்கு முன்னணி வீரர் ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலியா அனுமதி வழங்கியுள்ளது.

உலகில் கொரோனா பரவல் ஏற்பட்டதையடுத்து, பல நாடுகளும் தம் நாட்டுக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதைக் கட்டாயமாக்கியது. அவ்வாறு தடுப்பூசி செலுத்தாமல் வரும் வெளிநாட்டுப் பயணிகள் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப் படாமல், விமான நிலையத்திலிருந்து அப்படியே திருப்பி அனுப்பப் பட்டனர்.

இந்நிலையில் கடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வந்த முன்னணி டென்னிஸ் வீரர் ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத்தால் அவருக்கு ஆஸ்திரேலியாவுக்குள் வர அனுமதி மறுக்கப் பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு போட்டியில் பங்கேற்காமல் ஜோகோவிச் சொந்த நாட்டுக்கு திரும்பினார்.

இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் உலகளவில் கட்டுக்குள் வந்ததையடுத்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளன.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவும் தங்கள் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமல்ல என்று விதிமுறைகளைத் தள்ர்த்தியுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னில் போட்டியில் பங்கேற்க ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலியா அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com