தம்பி இன்னும் ஆட்டம் முடியல... மொக்கை வாங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள்!

தம்பி இன்னும் ஆட்டம் முடியல... மொக்கை வாங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள்!
Published on

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், ஆட்டம் முடிந்ததாக நினைத்து ஆஸ்திரேலிய வீரர்கள் செய்த சம்பவம் ரசிகர்களை சிரிப்பலையில் நனைய வைத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி 469 ரன்களைக் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 296 ரன்களை மட்டுமே எடுத்தது.

நேற்று 3வது நாளாக நடந்த இப்போட்டியில் முகம்மது சிராஜ், இந்திய அணியின் கடைசி விக்கெட்டாக, 68வது ஓவரில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, கேமரூன் க்ரீன் வீசிய பந்து சிராஜின் காலில் பட்டது. உடனே ஆஸ்திரேலிய வீரர்கள்ளும் அவுட் கேட்டனர். அம்பயரும் யோசிக்காமல் அவுட் வழங்கிவிட்டார்.

ஆனால் சிராஜ் டி ஆர் எஸ் கேட்டார். அதைத்தொடர்ந்த டி ஆர் எஸ் முடிவு என்ன வருகிறது என்பதைப் பார்ப்பதற்குள்ளாகவே, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிலர் ஆட்டம் முடிந்துவிட்டதாக கருதி மைதானத்தை விட்டு வெளியே சென்று விட்டார்கள். பின்னர் தான் ரீப்ளேயில் பந்து அவரது பேட்டில் பட்ட பின்னர்தான் காலில் பட்டது தெரியவந்தது. இதையடுத்து மூன்றாம் நடுவர் இது அவுட் இல்லை எனக் கூறினார்.

அதற்குப்பிறகுதான் மைதானத்தை விட்டு சென்ற வீரர்களுக்கு அவுட் இல்லை என தெரியவர தாங்கள் மொக்கை வாங்கியது அப்போதுதான் தெரியவந்தது. ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த செயல் அங்கு கூடியிருந்த ரசிகர்களிடம் மொக்கை வாங்கியதோடு, மைதானமே சிரிப்பலையில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com