சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் ஆஸ்திரேலிய அணி!

கிரிக்கெட் அணி
கிரிக்கெட் அணி

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியது ஆஸ்திரேலிய அணி முன்னேறியுள்ளது.

நேற்றைய இறுதி போட்டியில் தோற்றத்தின் மூலம் ஒருநாள் தொடரை இந்தியா இழந்ததுடன், நம்பர் ஒன் இடத்தையும் இந்திய அணி இழந்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியாவும் 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

ஆஸ்திரேலியா அணி
ஆஸ்திரேலியா அணி

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது ஒருநாள் போட்டியை வென்றதுடன் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இதற்கிடையே, 3-வது ஒருநாள் போட்டி தொடங்கும் முன், ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 114 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 112 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றதால் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 113.286 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியது. 112.638 புள்ளிகள் பெற்று இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடரை இந்தியா இழந்ததுடன், நம்பர் ஒன் இடத்தையும் இந்திய அணி இழந்துள்ளது. மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து நீடிக்கிறது.

நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா அணி சர்வதேச கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத் தக்கது .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com