பி.சி.சி.ஐ., தலைவராவாரா? ரோஜர் பின்னி!

ரோஜர் பின்னி
ரோஜர் பின்னி

பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்ந்து எடுப்பது உறுதியாகி விட்டது. 67 வயதான ரோஜர் பின்னி, இந்தியாவுக்காக விளையாடிய முதல் ஆங்கிலோ இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். இவருடைய மகன் ஸ்டூவர்ட் பின்னியும் இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார். பயிற்சியாளர், வீரர்களின் திறமையை அடையாளம் காணும் நிபுணர், நிர்வாகி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் ரோஜர் பின்னி செயல்பட்டு இருக்கிறார்.

பி.சி,சி,ஐ., புதிய தலைவராக ரோஜர் பின்னி இன்று தேர்வு செய்யப்படுகிறார். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) 91 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று மும்பையில் நடக்கிறது. பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி பதவி விலகினார். இதையடுத்து பி.சி.சி.ஐ., யின் 36 வது தலைவராக 1983 ல் இந்திய அணி கோப்பை வெல்லக் கைகொடுத்த முன்னாள் 'ஆல் ரவுண்டர்' ரோஜர் பின்னி இன்று தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஜர் பின்னி
ரோஜர் பின்னி

தற்போது கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவராக பதிவி வகிக்கும் ரோஜர் பின்னி, இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 205 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பேட்டிங்கில் சராசரியாக 34 வைத்திருக்கிறார். பிசிசிஐயின் இதுவரை 2 டெஸ்ட் வீரர்களே பிசிசிஐ தலைவராக தங்களது பதவியை முழுமையாக இருந்துள்ளனர்.

தவிர செயலராக ஜெய் ஷா 33, துணைத்தலைவராக ராஜிவ் சுக்லா பதவியில் தொடரவுள்ளனர். மகாராஷ்டிர பா.ஜ., தலைவர் ஆஷிஷ் ஷேலர் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவுக்கு நெருக்கமான தேவஜித் சய்கியா இணைச்செயலராக தேர்வாக உள்ளனர்.

பட்டியலில் முன்னாள் தலைவர் சீனிவாசன் 78, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பெயர்களும் போட்டியில் உள்ளன. இது குறித்து இன்று முடிவெடுக்கப்படலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com