இம்பேக்ட் விதியை அதிரடியாக நீக்கிய பிசிசிஐ!

Impact Player  rule
Impact Player rule
Published on

ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இம்பேக்ட் விதிமுறைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிசிசிஐ தற்போது அந்த விதிக்கு தடை விதித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் என்ற விதி 2023ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்து வந்தது. இம்பேக்ட் விதி என்றால், இன்னிங்ஸின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஒரு வீரரை மாற்றிவிட்டு வேறு ஒரு வீரரை இறக்கலாம்.

எடுத்துக்காட்டாக சிஎஸ்கே விளையாடும்போது முதலில் பேட்டிங் செய்தால், பேட்டிங்கில் சிவம் துபேவை இறக்கிவிட்டு, பவுலிங் செய்யும்போது வேறு ஒரு பந்துவீச்சாளரை அவருக்கு பதில் விளையாட வைக்கலாம். இதனால் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் கூடுதலாக ஒரு வீரரை தேர்வு செய்து தேவைப்படும்போது இறக்கி அதிக ரன்களை குவித்து வந்தன. இதனால், ஆல்ரவுண்டர்கள் குறையும் அபாயம் ஏற்பட்டது. இந்த விதிக்கு பல முன்னணி வீரர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். குறிப்பாக ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பிசிசிஐக்கு கடிதம் எழுதியிருந்ததாக சொல்லப்படுகிறது.

ரோகித் ஷர்மா இம்பேக்ட் விதியின் மூலம் இந்திய அணிக்கு கிடைக்க வேண்டிய ஆல்ரவுண்டர்கள் கிடைக்காமல் போய்விடுவார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். உதாரணத்திற்கு வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சை பயன்படுத்தும் ஐபிஎல் அணிகள் அவருடைய பேட்டிங்கை பயன்படுத்தாமல் போய்விடுகிறனர். இதனால் ஆல் ரவுண்டர்கள் கிடைக்காமல் போக வாய்ப்பு இருப்பதாக ரோகித் சர்மா கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள்:
யுவராஜ் சிங் சாதனையில் இணைவாரா சஞ்சு சாம்சன்!
Impact Player  rule

ஆகையால் வரும் 2025ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் விதி இருக்குமாம். ஆனால் அதற்கு முன்னர் நடக்கும் சையத் முஸ்தாக் அலி தொடரில் இம்பேக்ட் விதி நீக்கப்படும். ஏனெனில், இந்தத் தொடரில் அதிகம் ஆல் ரவுண்டர்கள் உருவாகுவார்கள் என்பதால், கட்டாயம் இம்பேக்ட் விதி நீக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் 2026ம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் விதி இருக்காது என்ற தகவல் வந்துள்ளது.

இது கிரிக்கெட் வட்டாரத்தினருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நல்ல முடிவாகத் தோன்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com