டி20 உலக கோப்பை: டிராவிடை தொடர்ந்து ரோகித் சர்மாவுக்கு வலைவீசும் பி.சி.சி.ஐ!

rahul dravid and rohit sharma
rahul dravid and rohit sharma

இந்திய கிரிக்கெட்டில் தற்போது பல விஷயங்கள் நடந்து வருகின்றன. உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) பல துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளது. ரோஜர் பின்னி தலைமையிலான பி.சி.சி.ஐ தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்ட சிலருக்கு பணி நீட்டிப்பு வழங்க முடிவு செய்துள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா தோற்ற நிலையிலும் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக தொடர வேண்டும் என்று பி.சி.சி.ஐ விரும்புகிறது. தலைமைப் பயிற்சியாளரின் விருப்பப்படியே அவருக்கு உதவியாளர்களையும் வழங்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.

ராகுல் டிராவிடை தலைமை பயிற்சியாளராக தக்கவைத்துக் கொண்டுள்ள பி.சி.சி.ஐ 2024 டி20 உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மாவே இந்திய அணிக்கு தலைமையேற்க வேண்டும் என விரும்புகிறது. தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி மற்றும் டி20 உலக கோப்பைக்கான திட்டமிடுதல் குறித்து விவாதிக்க பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா, விரைவில் குழு தலைவர் அஜித் அகர்கரை தில்லியில் சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டி20 ஒருநாள் சர்வதேச போட்டியில் ஹர்திக் பாண்டியா பங்கேற்க வாய்ப்பில்லை என்ற நிலையில் சூர்யகுமார் யாதவ் அல்லது ரோகிச் சர்மாதான் அணிக்கு தலைமையேற்க சரியான நபர் என்று பி.சி.சி.ஐ கருதுகிறது. ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிகளுக்கு பிறகு, டி20 போட்டிகளுக்கு ரோகிச் சர்மாதான தலைமை ஏற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ நினைக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டி20 ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா தலைமையேற்க ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் டி20 உலக கோப்பை போட்டிக்கும் அவரே தலைமை வகிப்பார். ஒருவேளை ரோகித் தலைமை ஏற்க உடன்படாவிட்டால் சூர்யகுமார் யாதவே தொடர்ந்து டி20 போட்டிகளுக்கு தலைமையேற்று நடத்திச் செல்வார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் படியுங்கள்:
பி.சி.சி.ஐ திட்டத்துக்கு ராகுல் டிராவிட் சம்மதிப்பாரா?
rahul dravid and rohit sharma

கடந்த முறை டி20 உலக கோப்பை போட்டிக்கு ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு தலைமையேற்றார். அவர் தலைமையில் இந்திய அணியும் சிறப்பாக விளையாடியது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கு ரோகித் தலைமையேற்கும் நிலையில், ஹர்திக் பாண்டியா ஓய்வுக்குப் பின் மீண்டும் அணிக்கு திரும்பினால் என்ன நடக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாகும்.

இதனிடையே தென்னாப்பிரிக்காவுக்கான சுற்றுப் பயணத்திலிருந்து தம்மை விடுவிக்குமாறு பி.சி.சி.ஐ-யிடம் விராட் கோலி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சொந்த அலுவல்கள் காரணமாக அவர் விலக முடிவு செய்திருக்கலாம். ரோகித் சர்மாவைப் போல விராட் கோலியும் கடந்த ஒருவருடமாக டி20 போட்டிகளில் விளையாடவில்லை. உலக கோப்பை ஒருநாள் போட்டி அல்லது சாம்பியன்ஸ் டிராபிக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்தவே அவர் விரும்புவதாகத் தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com