உஷாரய்யா உஷாரு! பிசிசிஐ கண்காணிப்பில் 30 வீரர்கள்!

சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி

லககோப்பை டி20 தொடரில் இந்திய அணியின் வீரர்களைத் தேர்ந்தெடுக்க பிசிசிஐ 30 வீரர்களின் செயல்பாட்டை கண்காணிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது..

இருபது ஓவர் கொண்ட டி20 உலககோப்பை, இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் உலகம் முழுவதும் 20 அணிகள் பங்குப்பெறவுள்ளன. ஆகையால் இந்தியா மிகவும் கவனத்துடனும் வெறியுடனும் விளையாடினால் மட்டுமே வெற்றிப்பெற இயலும். இந்தநிலையில் இந்திய அணி அடுத்த வாரம் தொடங்கவுள்ள டி20 தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.

இதுவே உலககோப்பைக்கு முன்னர் இந்திய அணி கடைசியாக பங்குப்பெறும் டி20 தொடர். இந்த டி20 தொடருக்கு முன்னர் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது. அதன்பின்னரே இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்த சில நாட்களிலேயே உலககோப்பை டி20 தொடர் ஆரம்பமாகவுள்ளது. இது இந்திய அணி வீரர்களுக்கு நிச்சயம் மூச்சே விட முடியாத அளவுக்கு ஒரு நெருக்கடியை கொடுக்கும்.

இது அவர்களின் மன நலத்தையும் உடல் நலத்தையும் பாதிக்கவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே சில வீரர்கள் காயம் காரணமாக ஓய்வில் உள்ளனர். இந்த நெருக்கடியான அட்டவணையில் இந்திய வீரர்களை ஒவ்வொரு தொடருக்கும் ஏற்றவாரு பிரித்தே தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல் அவர்களின் மாற்றங்களையும் ஃபார்ம்களையும் தொடர்ந்து கண்காணிப்பில் வைப்பது அவசியம்.

இதனைக் கருத்தில் கொண்டுத்தான் பிசிசிஐ இந்திய வீரர்களைக் கண்காணிப்பில் வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. அடுத்து நடைபெறவிருக்கும் ஆஃப்கானிஸ்தான் உடனான டி20 தொடருக்குப் பின்னர் இந்திய அணி டெஸ்ட் தொடரிலேயே விளையாடவுள்ளதால், 20 ஓவர் போட்டிக்கு நீண்ட இடைவெளி அமைகிறது.

ஆகையால் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாட்டைப் பொறுத்தே டி20 உலககோப்பை தொடரில் இந்திய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதேபோல் ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. உறுதியாக எந்த முடிவும் எடுக்க முடியாது.

உலககோப்பை டி20 தொடரில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, சுப்மன் கில், பும்ரா ஆகியோர் முக்கிய வீரர்களாகக் கருதப்படுகிறார்கள். அதேபோல் ஹார்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பாண்ட் ஆகியோரும் காயத்திலிருந்து குணமாகி மீண்டும் பயிற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹார்திக் மற்றும் பாண்ட் உட்பட மொத்தம் 30 இந்திய வீரர்களை ஐபிஎல் தொடரில் கண்கானித்து அவர்களின் செயல்பாட்டைப் பொறுத்தே உலககோப்பை வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. வீரர்களின் ஃபார்ம், உடற்தகுதி ஆகியவற்றை கருத்தில்கொண்டே வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com