"கேப்டன் பதவியை என்னால் நிராகரிக்க முடியவில்லை" - மனம் திறந்த பென் ஸ்டோக்ஸ்!

Ben Stokes
Ben Stokes

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், அணியை வழிநடத்துவது குறித்து திறந்த மனதுடன் பேசினார். கேப்டன் பதவி என்னால் நிராகரிக்க முடியாத ஒருவாய்ப்பாகும் என்றும் அவர் கூறினார்.

ஓல்லி போப் அடித்த 196 ரன்கள் மற்றும் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லேயின் 7 விக்கெட்டுகளாலும், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ள நிலையில் 2-0 என முன்னிலை வகிக்க தயாராகி வருகிறது.

முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 70 ரன்கள் குவித்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், டெஸ்ட் போட்டிகளில் அணிக்கு தலைமைதாங்க  ஒரு போதும் ஆசைப்பட்டதில்லை  என்று உறுதிப்படுத்திய அவர், கேப்டன் பதவியை மிகவும் ரசிப்பதாக கூறினார்.

உண்மையாகச் சொல்வதென்றால், நான் ஒருபோதும் செய்யவிரும்பாத அல்லது செய்ய நினைக்காத ஒன்று. கிரிக்கெட்டின் எந்த நிலையிலும் எனக்கு அதிக பொறுப்பு இருந்ததில்லை. எனக்கு ஆர்வம் மட்டும் இருந்தது. ஒரு கட்டத்தில் கேப்டன் பதவி தேடி வந்த போது அதை என்னால் நிராகரிக்க முடியவில்லை. உண்மையிலேயே கேப்டன் பணியை நாம் மிகவும் ரசித்தேன் என்று பென் ஸ்டோக்ஸ், தனியாருக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகக் கதை: செருத்துணையால் மூக்கறுபட்ட பட்டத்தரசி!
Ben Stokes

கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. பல்வேறு கோணங்களில் இருந்து மக்களை கவனிக்கும் பொறுப்பு அது. களத்தில் இருந்தாலும் சரி, களத்துக்கு வெளியே இருந்தாலும் சரி, தனிப்பட்டவர்களின் ஆளுமைகளை புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இருப்பார்கள். ஒரு அணியை முன்னோக்கி நகர்த்திச் செல்லும் பொறுப்பை நான் விரும்பி செய்தேன் என்றார்.

“பாஸ்பால்” என்பது ஊடகங்களால் உருவாக்கப்பட்டது. இந்த அணுகுமுறையிலிருந்து  நாங்கள் விலகி இருக்கவே விரும்புகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் என்ன செய்தோம், எப்படி விளையாடினோம் என்பதிலிருந்து வந்த சொற்றொடர் அது. அதை நாஹ்கள் விரும்பவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி விளையாடுகிறது என்பதை சொல்ல முயற்சிக்கிறோம் என்றார் பென் ஸ்டோக்ஸ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com