கோவைக்காய் பலன்கள்!

கோவைக்காய் பலன்கள்!

கோவை இலைக்கும் கோவைக்காய்க்கும் மருத்துவ பலன்கள் நிறைய உள்ளன. பல்வேறு நோய்களுக்கு நிவாரணம் தந்து ஆரோக்யமாக நம்மை வைக்கிறது.

விலை குறைவாக இருக்கும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பல நோய்கள் நம்மை நெருங்காது.

கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம் .

கோவை இலை சாறுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து மேனியில் தடவி வர சொறி, தேமல் படை போன்றவை வராது .

ரத்த சர்க்கரை யை கட்டுப்படுத்த வல்லது.

கோவை சாறு,10மி லி அளவில் காலையில் மட்டும் குடித்து வர இரைப்பு, இருமல் கபம் நீங்கும்.

மார்புச்சளி, மதுமேகம், வீக்கம் ஆகியவை தீரும்.

கோவைக்காயை நறுக்கி வெயிலில் காய வைத்து பொடித்து வைத்துக் கொண்டு அதை 1டீஸ்பூன் மூன்று வேளை சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குணமாகும் . சர்க்கரை அளவை குறைக்க வல்லது .

கோவைக்காயை பச்சடியாக செய்து சாப்பிட வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். கசப்பு சுவை என ஒதுக்காமல் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் வராததோடு கிருமிகளை அழித்து உடலுக்கு குளிர்ச்சி தரும் . முற்றின காயாக இல்லாமல் பிஞ்சாக வாங்கி சமைக்க , சுவையாக இருப்பதோடு ஆரோக்யமும் மேம்படும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com