

சர்வதேச கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் .பிஃபா(FIFA ) நடத்தும் சர்வதேச ஆண்கள் கால்பந்து போட்டி வட அமெரிக்காவில் 2026 ஜூன் -ஜூலை வரை நடைபெறுகிறது, அமெரிக்கா , மெக்சிகோ மற்றும் கனடாவில் உள்ள 16 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. மூன்று நாடுகள் கூட்டாக உலகக் கோப்பையை நடத்துவது இதுவே முதல் முறையாகும், மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் நடத்துவது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு ஜப்பானும், கொரியாவும் இணைந்து 2002 ம் ஆண்டு இணைந்து நடத்தின.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி பெற்ற 42 நாடுகளில் 20 நாடுகளின் மக்கள் தொகை நமது தலைநகர் டெல்லியின் ஜனத்தொகைக்கும் குறைவுதான் என்பது ஆச்சர்யமான ஒன்று.
1.6 லட்சம் மக்கள் தொகை கொண்ட குட்டி நாடு குராக்கோ ( curacao). நெதர்லாந்து கிங்டம் கட்டுப்பாட்டில் உள்ள கரீபியன் தீவுகளில் உள்ள ஒரு சிறிய தீவாகும்.இது 2026 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த நாட்டின் கால் பந்து அணியை தலைமை ஏற்று நடத்தப் போகிறார் 'டிக் அட்வாகேட்' எனும் 78 வயதுக்காரர். இதற்கு முன் 2018 ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் முறையாக ஐஸ்லாந்து தகுதி பெற்றது.அப்போது அதன் ஜனத்தொகை 3.5 லட்சம்.
இது வரை 2026 ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு 7 குட்டி நாடுகள் தகுதி பெற்றுள்ளது . அவைகள் எந்தெந்த நாடுகள் வாங்க பார்க்கலாம்...!
1) கேபோ வெர்டே (Cabo Verde) என்பது மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையில், அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள 10 எரிமலைத் தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்ட நாடாகும். இதன் தலைநகரம் பிரையா (Praia). 1975-ல் போர்த்துகீசியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற இந்நாடு, ஆப்பிரிக்க மற்றும் போர்த்துகீசிய கலாச்சாரங்களின் கலவையாகும். இது ஒரு ஜனநாயகக் குடியரசு மற்றும் சுற்றுலாவுக்குப் பிரபலமான இடமாகும். இதன் மக்கள் தொகை 5.3 லட்சம்
2) கத்தார் - வளைகுடா நாடுகளில் ஒன்று .ஒரு நூற்றாண்டுக்கு முன்பு குறைந்த அளவே மக்களைக் கொண்டிருந்தது. யாரும் குடியிருக்க முடியாத நிலம் அதன் வசம் இருந்தது. மீனவர்கள், முத்து சேகரிப்போரை கொண்ட குடியிருப்புகள் மட்டுமே அந்த நாட்டில் இருந்தன. பெரும்பாலான குடிமக்கள் நாடோடியாக வந்து குடியேறியவர்கள்.இன்று உலக கோப்பை கால்பந்து போட்டி நடத்திய நாடுகளில் ஒன்று .இதன் மக்கள் தொகை 31.2லட்சம்
3) உருகுவே - தென் அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள நாடு .அமெரிக்க கண்டத்தின் இரண்டாவது சிறிய நாடான உருகுவே, பிரேசில் மற்றும்அர்ஜென்டினாவின் அருகிலுள்ள குட்டி நாடு இதன் ஜனத்தொகை 33.8 லட்சம்.
4)குரோசியா - தென் ஐரோப்பாவில் பால்கான் பகுதியில் இருக்கின்ற ஒரு குட்டி நாடு தான் இந்த குரோசியா.அதன் ஜனத்தொகை 38.5 லட்சம்
5) பனாமா - கொலம்பியா வழியாக கோஸ்டாரிகாவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் ஒரு மத்திய அமெரிக்க நாடு .கரீபியன் கடல் வழியாக அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் உலகளாவிய வர்த்தகம் மற்றும் போக்குவரத்தின் மையமான பனாமா கால்வாய் இங்கு தான் உள்ளது.இதன் ஜனத்தொகை 45.7 லட்சம்.
6) நியூசிலாந்து - பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது வடக்குத் தீவு, மற்றும் தெற்குத் தீவு ஆகிய இரண்டு முக்கியமான நிலப்பகுதிகளையும், சதாம் தீவுகள் போன்ற பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. இதன் ஜனத்தொகை 52 லட்சம்