சதங்கள் மழை..! 1957 – 58ல் நடந்த அதிசயம்!

Centuries in cricket match
Centuries in cricket match

சதங்கள் மழை அனுபவித்தது இந்த டெஸ்ட் தொடர். எங்கே? எப்போது? எந்த அணிகள் மோதின? சுவாரஸ்யமான தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.

மொத்தம் பல விதமான 13 சதங்கள். சதங்கள், இரட்டை சதம், இரண்டு மூன்று சதங்கள். இவற்றைத் தவிர நெருங்கி தவற விட்ட சதங்கள், இரட்டை சதங்கள்.
ஒரு வீரரே இரண்டு சதங்கள், மூன்று சதங்கள் வேறு. அறிமுக டெஸ்டில் சதம். டெஸ்டில் இந்த வீரரின் முதல் சதமே உலக ரிகார்டு ஏற்படுத்தியது. மொத்தம் நடந்த 5 டெஸ்டுகளில் 4 முடிவை கண்டன. தொடர் 3 - 1 என்று மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு சாதகமாக முடிந்தது. 1957 - 58 ல் அப்துல் கர்தார் தலைமையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி , மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டது. மேற்கு இந்திய தீவுக்கள் அணி கேப்டன் கெர்ரி அலெக்சண்டர்.

பாகிஸ்தான் அணி அங்கு 5 டெஸ்ட் மேட்ச்சுக்கள் விளையாடியது. இந்த தொடரில் மேற்கு இந்திய தீவு அணி வீரர்கள் 8  சதங்களும் பாகிஸ்தான் அணி வீரர்கள் 5 சதங்கள் எடுத்தனர்.

காரி சோபர்ஸ் (3)
கோனர்ட் ஹண்ட் (3)
வீக்ஸ் (1)
வால் காட் (1)

ஹனிப் முஹம்மது (1)
வாசிர் முஹம்மது (2)
இம்டியாஸ் அகமத் (1)
சயத் அகமத் (1)

மேற்கு இந்திய அணியின் வீரர் காரி சோபர்ஸ், டெஸ்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்டில் அவர் எடுத்தது 80 ரன்கள். ( போர்ட் ஆப் ஸ்பெயின்) மூன்றாவது டெஸ்ட் அவரது முதல் சதத்தை கண்டது. அவர் அருமையாக ஆடி மூன்று சதமாக மாற்றினார். அது மட்டும் அல்லாமல் அன்றைய கால கட்டத்தில், லென் ஹட்டன் ஏற்படுத்தி இருந்த உலக ரிக்கார்டான 364 ரன்களை கடந்து சென்று புதிய உலக ரிக்கார்டான 365* ரன்களை எடுத்து சாதனை படைத்தார். இந்த சாதனையைப் படைக்கும்பொழுது இவர் 38 பவுண்டரிகள் அடித்தார். ஆனால், ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. (வருங்காலத்தில், இவர்தான் முதல் தர கிரிக்கெட் மேட்சில் ஒரே ஒவரின் ஆறு பந்துக்களையும் ஆறு சிக்சர்களாக மாற்றி முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தவர் ஆவார்) ஆனால், இதே டெஸ்ட் மேட்சில் இரட்டை சதம் எடுத்த கோனர்ட் ஹண்ட், சிக்ஸர் அடித்து அசத்தியுள்ளார். இந்த தொடரின் மூன்றாவது கிங்ஸ்டன் டெஸ்டில் ஹண்ட்டும், சோபர்சும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 446 ரன்கள், பார்ட்னெர்ஷிப்பில் சேர்த்தனர்.

கோனர்ட் ஹண்ட் இரட்டை சதம் எடுத்தார். 260 ரன் அவுட். 28 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உதவியுடன். இதே தொடரில் காரி சோபர்ஸ் மேலும் இரண்டு சதங்கள் பதிவு செய்தார். அதுவும் அடுத்த டெஸ்டிலேயே. (ஜியார்ஜ் டவுன்) காரி சோபர்ஸ் முதல் இன்னிங்சில் 125 ரன்கள், இரண்டாவது இன்னிங்சில் 109* கோனர்ட் ஹண்ட் எடுத்த மற்றும் ஒரு சதம் இந்த தொடரின் முதல் டெஸ்டில் (பிரிட்ஜ்டவுன்). இதுதான் கோனர்ட் ஹண்டின் அறிமுக டெஸ்ட். எடுத்த ரன்கள் 142. இந்த இரண்டு சதங்களை தவிர கோனர்ட் ஹண்ட் எடுத்த மூன்றாவது சதம் , நான்காவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்க்சில் எடுத்த ரன்கள் 114.

எவேர்ட்டன் வீக்ஸ் 197 ரன்கள் குவித்தார், முதல் டெஸ்டில். 3 ரன்களில் இரட்டை சதத்தை மிஸ் செய்தார்.
இவரை தவிர, சதம் எடுத்த மற்றும் ஒரு வீரர் கிளைடி வால்காட். நான்காவது டெஸ்ட் ( ஜியார்ஜ் டவுன்) முதல் இன்னிங்சில் 145 ரன் அவுட். ரோகன் கன்ஹாய் 4 ரன்களில் சதத்தை தவற விட்டார். தொடரின் இரண்டாவது டெஸ்ட் ( போர்ட் ஆப் ஸ்பெயின்) 96 ரன்கள்.

பேட்ஸ்மன் ஹனிப் முஹம்மது, பாகிஸ்தான் அணிக்காக , முதல் மூன்று சதத்தை பதிவு செய்தார், முதல் டெஸ்டில் (பிரிட்ஜ்டவுன்) இவர் எடுத்தது 337 ரன்கள். 24 பவுண்டரிகள். இவரும், இம்டியாஸ் அகமத் இருவரும் பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்சில் ஓபன் செய்து 152 ரன்கள் குவித்தனர். 91 ரன்கள் எடுத்த இம்டியாஸ் அகமத், 9 ரன்களில் சதம் எடுப்பதை தவற விட்டார். பாகிஸ்தான் அணி ஸ்கோர் 626ல் ஆறாவது ஆட்டக் காரராக ஹனிப் முஹம்மது அவுட் ஆனார். மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங் சில் 106 ரன்கள் எடுத்தவர் பாகிஸ்தானின் வீரர் வாசிர் முஹம்மது.

இதையும் படியுங்கள்:
இஷன் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐய்யரை கழட்டிவிட்ட BCCI.. இந்திய அணியில் மீண்டும் விளையாடுவார்களா?
Centuries in cricket match

இவர்ஐந்தாவதுடெஸ்டில் (போர்ட்ஆப்ஸ்பெயின்) 189 ரன்கள்குவித்தார். கிப்ஸ்பந்தில்அவுட்ஆனார். 22 பவுண்டரிகள்எடுத்தார். இந்த இரண்டு சதங்களை தவிர வெகு நெருக்கத்தில் இவரால் நான்காம் டெஸ்டில் சதம் எடுக்க முடியவில்லை. பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் ஆல் அவுட் 318 ரன்கள். இவரதுஸ்கோர் 97* (நாட்அவுட்) அடுத்து சதம் எடுத்த வீரர் இம்டியாஸ் அகமத்.
மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இவர் எடுத்தரன்கள் 122. பவுண்டரிகள் 14. நான்காவது டெஸ்டில் (ஜியார்ஜ்டவுன்) சயத் அகமத் சதம் அடித்தார். 150 ரன்கள், பவுண்டரிகள் 16

இந்த 1957 - 58 தொடரில் முதல் டெஸ்ட் ட்ராவில் முடிவடைந்தது.

இரண்டாம்டெஸ்ட் 120 ரன்கள்வித்தியாசம்

மூன்றாம்டெஸ்ட்ஒருஇன்னிங்ஸ் 174 ரன்கள்வித்தியாசம்

நான்காம்டெஸ்ட் 8 விக்கெட்டுக்கள்வித்தியாசம்

மேற்குஇந்தியஅணிஇந்தமூன்றுடெஸ்டுகளையும் வென்றனர்,

ஐந்தாம் டெஸ்ட் பாகிஸ்தான், ஒரு இன்னிங்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது.


இந்த தொடரில் சதங்கள் மழை பொழிய காரணமாக இருந்தவீரர்கள்:


காரிசோபர்ஸ் (365 * , 125, 109 *)

கோனர்ட்ஹண்ட் (260, 142 , 114)

எவேர்ட்டன்வீக்ஸ் (197)

கிளைடிவால்காட் (145)

ஹனிப்முஹம்மது (337)

வாசிர்முஹம்மது. (106 , 189)

இம்டியாஸ்அகமது (122)

சயத்அகமது (150)

இதுபோன்று சதங்கள் மழைக் கண்ட மற்றொரு தொடர் உலக கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் நடந்ததாகத் தெரியவில்லை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com