ஐபிஎல் அன்றும், இன்றும்… எத்தனையோ மாற்றங்கள்!

IPL
IPL

147 வருடங்களாக விளையாடப்பட்டு வரும் கிரிக்கெட், இன்றைய காலகட்டத்தில் இன்றியமையதாகி விட்டது. ஐ பி எல் சீசனுக்கு அடிமை ஆகாதவர்கள் குறையவாகவே காணப்படுகிறார்கள். ஐ பி எல் சீசன், ஆரம்பித்து 15 வருடங்களுக்குள், அபரிதமான வளர்ச்சி கண்டுள்ளது. 2008 முதல் சீசனில் அன்று மெதுவாக நடைபோட ஆரம்பித்த ஐ பி எல் மேட்ச்சுக்கள், இன்று படுவேகத்தில் பறக்கின்றன.

  • அன்று, ஐ பி எல் சீசன் ஆரம்பித்த காலகட்டத்தில் புகழ் பெற்ற டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ஆட்டங்களில் பங்கு பெற்று வந்த வீரர்கள் ஐ பி எல் அணிகளில் இடம் பெற்றனர்.

    இன்று நிலைமை தலைகீழாகி விட்டது. புது முகங்கள், புது புது வீரர்கள் இடம் பிடித்து கலக்கி, சில வருடங்களாக ஆடிக்கொண்டு இருக்கும் பல வீரர்களை கலங்க அடிக்க வைக்கின்றனர்.

  • அன்று, அனுபவத்தின் அடிப்படையில் மற்றும் புகழின் காரணமாக ஆட்டோமடிக்காக அணிகளில் இடம் பெற்றனர்.

    இன்று திறமை மற்றும் ரிசல்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

  • அன்று ரன்கள் குவித்தாலும், குவிக்காவிட்டாலும், விக்கெட்டுக்கள் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் அணியில் பல வீரர்களுக்கு இடம் இருந்தது.

    இன்று நிரந்தரம் இல்லாத இடம் ஆகி விட்டது ஐ பி எல் மேடை.

  • அன்று ஆரம்ப கட்டம். ஒரு பழக்கப்பட்ட விளையாட்டு முறைகளை பெரும்பாலும் பின்பற்றினார்கள். உதாரணத்திற்கு, பேட்டிங்கில் ஸ்கோயர் டிரைவ், கவர் டிரைவ், எக்ஸ்ட்ரா கவர் டிரைவ், ஸ்ட்ரையிட் டிரைவ், மிட் ஆன், மிட் ஆப், மிட் விக்கெட், ஸ்கோயர் லெக் க்ஷாட்டுக்கள், ஹூக், புல் போன்றவை.

    இன்று எந்தத் திக்கில் எப்படி அடிப்பார்கள் என்று கணிக்க முடியாது. ஓவரின் 6 பந்துக்களையயும் ரிவர்ஸ் ஸ்வீப்பில் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடிக்கும் திறமைசாலிகள் அதிகரித்து வருகின்றனர், என்பது அப்பட்டமான உண்மை.

  • அன்று பழக்கப்பட்ட வேக மற்றும் ஸ்பின் பவுலிங்குகள் இடம் பெற்றன.

    இன்று பவுலிங்கில் யார்க்கார்கள் அத்தியாவசியம். வித்தியாசமான முறையில் பந்துக்கள் வீச தெரிந்து இருப்பது கட்டாயம் தேவை. விக்கெட்டுக்கள் வீழ்த்துவதைவிட முக்கியம், ரன்களை கட்டுப்படுத்தும் பந்துக்கள்.

  • அன்று கட்டுக்கோப்பாக விளையாடப்பட்டன, மேட்ச்சுக்கள்.

    இன்று ஆக்ரோஷத்திற்கும் மிக முக்கிய இடம்.

  • அன்று அவ்வளவு பிரபலம் அடையவில்லை.

    இன்று வருடத்திற்கு வருடம் பிரபலம் அதிகரிக்கின்றது. ஏலத்தில் வீரர்களை எடுக்க தொடங்கும் போட்டி, பொறாமை இன்று மைதானத்தில் ஆடும்பொழுதும் வெளிப்படையாக காணப்படுகின்றது.

  • அன்று ஆட்டத்தின் மீது ஆர்வம் மேல் ஓங்கி தெரிந்தது.

    இன்று விளம்பரம், ஆக்ரோஷமான போட்டிகள் மேல் ஓங்கி நிற்கின்றது.

இதையும் படியுங்கள்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் (சத) சாதித்த சகோதரர்கள்..!
IPL
  • அன்று குறைவாக காணப்பட்டன சிக்ஸர்கள், பவுண்டரிகள்.

    இன்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. அதற்கு ஏற்றார்போல் சிக்ஸர்கள், பவுண்டரிகள் எண்ணிக்கை, வேகம் மேட்சுக்கு மேட்ச் பெரும்பாலும் அதிகரித்து வருகின்றன.

  • அன்று அவ்வளவாக இல்லாத பணம்...

    இன்று கோடிக்கணக்கில் இடம் பெற்றுள்ளது. விளம்பரதரார்கள், பரிசு பொருட்கள், வீரர்கள் சம்பாதிப்பது, டிக்கெட்டுக்கள் விலைகள் என்று பல்வேறு வகைகளில் பணம் புரள்வது அதிகரித்து விட்டது.

  • அன்று பெரும்பாலும் முடிவுகள் முன் கூட்டியே அல்லது ஆட்டத்தின் போக்கிலே கணிக்க முடிந்தது.

    இன்று ஆட்டம் எப்படி தலைகீழாக மாறும் என்று கணிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. ஒரு வேளை அதிகரித்து வரும் புது மாதிரியான ஆட்ட முறைகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

  • அன்று விளையாடியவர்கள் காயம் காரணமாக விலகியது குறைவு.

    இன்று காயங்கள் காரணமாக வீரர்கள் காணாமல் போவது அதிகரித்து வருகின்றது, வருத்தப்பட வேண்டிய முன்னற்றம்.

  • அன்று டிஆர்எஸ் அவ்வளவாக உபயோகப் படுத்தவில்லை. இன்று டிஆர்எஸ் உபயோகப் படுத்த படாத மேட்சே இல்லை என்று கூறலாம்.

  • அன்று ஒரு வீரர் விளையாட முடியாவிட்டால், சப்ஸ்டிட்யூட் வீரர் (substitute player) அவருக்கு பதிலாக பீல்டிங் மட்டும் செய்தார்.

    இன்று இம்பாக்ட் ஆட்டக்காரர் (Impact player) கை கொடுக்க காத்துக்கொண்டு இருக்கிறார்.

  • அன்று ஸ்லெட்ஜிங் (Sledging) என்றால் என்ன என்றார்கள். இன்று ஸ்லெட்ஜிங், என்பது ஆட்டத்தில் ஒரு பகுதியாகி விட்டது, வேதனை அளிக்கின்றது.

  • அன்று வேகம் இருந்தது. வேகத்துடன் விவேகமும் நேர்மையான போட்டி மனப்பான்மையும் இருந்தது.

    இன்று வேகத்தை துரத்தும் அதிவேகமும், கவுக்கும் தந்திரங்களும் ஆட்டத்திலும், வீரர்களிடமும், ரசிகர்களிடமும் அதிகம் காண முடிகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com