மாறும் புள்ளிப் பட்டியல்: இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா?

மாறும் புள்ளிப் பட்டியல்: இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா?
indian team t20 2022

நேற்று நடந்த இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான போட்டியில் இந்தியா தோல்லியைத் தழுவியதால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா? என்ற நிலை உருவாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்போடு நகர்ந்து வருகிறது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி. தற்சமயம் சூப்பர் 12 சுற்றின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் குரூப் ஏ, குரூப் பி பிரிவின் ஒவ்வொன்றிலும் தலா 6 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.

points table

குரூப் பி-யைப் பொறுத்தவரை தென்னாப்பிரிக்க அணி 5 புள்ளிகளுடனும், இந்தியா, பங்களாதேஷ் அணி தலா 4 புள்ளிகளுடனும், ஜிம்பாப்வே 3 புள்ளி, பாகிஸ்தான் 2 புள்ளி, நெதர்லாந்து புள்ளிகள் ஏதும் எடுக்காத நிலையிலும் தற்சமயம் உள்ளன.

தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்பபு அதிகளவில் உள்ளது. தற்சமயம் 4 புள்ளிகளுடன் இருக்கும் இந்தியா, அடுத்த இரண்டு போட்டிகளில் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது. இதில் ஒரு போட்டியிலாவது வென்றாலே அரையிறுதிக்கு செல்ல போதுமான புள்ளிகள் கிடைத்துவிடும்.

இருந்தாலும், இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோற்று, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்றால், அப்போது இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்படலாம்.

அதனால் இந்தியாவைப் பொறுத்தவரை அடுத்து வருகின்ற இரு போட்டிகளிலும் வெற்றி பெறுவதே அரையிறுதிக்கான சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com