மழையினால் கைவிடப்பட்ட சென்னை – லக்னோ ஐபிஎல் போட்டி!

மழையினால் கைவிடப்பட்ட சென்னை – லக்னோ ஐபிஎல் போட்டி!
Published on

டைபெற்று வரும் பதினாறாவது ஐபிஎல் போட்டித் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. மாலை 3.30 மணிக்கு லக்னோ ஏகனா ஸ்டேடியத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மனன் வோரா மற்றும் கைல் மயர்ஸ் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து ஆட வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து ஆட்டம் இழந்து தடுமாறியதால் பெரிதாக ரன்களைக் குவிக்க முடியவில்லை. ஆனால், பதோனி மட்டும் நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்து அரை சதத்தைக் கடந்தார். லக்கோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

நீண்ட நேரமாக மழை பெய்தபடியே இருந்ததால் இன்றைய போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்த ஆட்டத்தில் லக்னோ அணியின் சார்பாக அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி ஆட்டம் இழக்காமல் 59 ரன்களும், பூரன் 20 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியின் சார்பாக மொயின் அலி, பதிரனா மற்றும் தீட்சனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com