சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து ட்விட்!

Chief Minister Stalin
Chief Minister Stalin
Updated on

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார் .

நேற்று ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி vs குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையான இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடை பெற்றது. அதில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்து இலக்கு நிர்ணயித்தது . பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடிய போது மழை குறுக்கிட மழை நின்ற பின்னர் இரவு 12.10 மணிக்கு தொடங்கிய போட்டி, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

பின்னர் சென்னை அணி வெற்றி பெற 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த பரபரப்பான இறுதிப்போட்டி ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியினை வீழ்த்தி தனது கோப்பை கனவினை நிறைவேற்றி கொண்டது. இதன்மூலம் 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸின் சாதனையை சமன் செய்துள்ளது.

சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தோனி என்ற மனிதனின் கீழ் 5வது ஐபிஎல் கோப்பையை வென்ற மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது மிகச்சிறந்த கிரிக்கெட் போட்டி என்றும், இதில் நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தினார் என்றும் தமது ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com