மீண்டும் வைரலான சீன வீராங்கனை!

Zhou Yaqin
Zhou Yaqin
Published on

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பேலன்ஸ் பீம் ஜிம்னாஸ்டிக் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற சீன வீராங்கனை செள யகின் (zhou Yaqin) தனது சக வீராங்கனைகள் ஆலிஸ் டி'அமடோ மற்றும் மணிலா எஸ்போசிடோ பதக்கத்தை கடிப்பது போல போஸ் கொடுத்ததை பார்த்து அதுவும் ஒரு நடைமுறை என்று அப்பாவியாக நினைத்து தானும் அது போல பதக்கத்தை கடித்து போஸ் கொடுப்பார். அந்த வீடியோ உலகெங்கிலும் வைரலாக, செள யகின் புகழ் பெற்றார். 

18 வயதான  செள யகின் ஏற்கனவே தனது ஜிம்னாஸ்டிக்ஸ் வாழ்க்கையில் ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார். மூன்று வயதில்  ஜிம்னாஸ்டிக்ஸ்  பயிற்சியை தொடங்கிய செள, பேலன்ஸ் பீம் பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர். 2020 ஆம் ஆண்டில், சீன சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்கள் பிரிவில் அவர் தங்கம் வென்றார். மேலும் அவர் சமீபத்தில் சீன தேசிய விளையாட்டு மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.

சமீபத்தில் ஒரு வீடியோ மூலம் மீண்டும் செள யகின் வைரலானார். அவர் தனது ஒலிம்பிக் சீருடையில் ஒரு உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்குவதை போல காட்சிகள் பகிரப்பட்டுள்ளன. அவர் அந்த  உணவகத்தை நடத்தும் தனது பெற்றோருக்கு உதவியாக உள்ளார்.

இதையும் படியுங்கள்:
போட்டியிலிருந்து வெளிநடப்பு செய்த பாகிஸ்தான் அணி… வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி! எப்போது தெரியுமா?
Zhou Yaqin

ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற வீரர்களை எல்லாம் அந்நாட்டு மக்கள் பெருமளவில் கொண்டாடுகின்றனர். அதுவும் இந்திய விளையாட்டு வீரர்கள் வென்ற பதக்கங்கள் மிகவும் குறைவு என்றாலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சீனாவை பொறுத்த வரையில், ஒலிம்பிக்கில் அதன் ஆதிக்கம் அதிகம். பதக்கங்களை பொறுத்தவரை வாரிக் குவித்து இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது. சீனாவில் சிறு வயதில் இருந்தே விளையாட்டு வீரர்கள் தயார் செய்யப்படுகின்றனர். ஆயினும் அவர்களுக்கு இந்தியர்களுக்கு கிடைத்த அளவிற்கு விளம்பரமும் வரவேற்புகளும் கிடைப்பதில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com