வரப்போகுது Legends Premier League : பிசிசிஐ மெகா பிளான்! ரசிகர்களே தயாரா?

LPL
LPL
Published on

இந்திய அணியின் முன்னாள் வீரர்களின் ஆட்டத்தை மீண்டும் காண வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்? இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் ரசிகர்கள் யாரும் அதனை தவற விட மாட்டார்கள் அல்லவா! உங்களுக்காகவே வரப் போகிறதாம் லெஜன்ட்ஸ் ப்ரீமியர் லீக் (Legends Premier League). இதுகுறித்த கூடுதல் விவரங்களை இப்போது காண்போம்.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் ஐபிஎல் தொடர் வந்து விட்டால் போதும்; சுமார் இரண்டு மாதங்களுக்கு இந்தியா முழுக்க திருவிழா மாதிரி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். உலகின் மற்ற நாடுகளில் நடத்தப்படும் உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐசிசி தொடர்களை விடவும், இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமாகி விட்டது. இதற்கு மிக முக்கிய காரணமே ரசிகர்கள் தான்.

ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடந்து வரும் அதே வேளையில், மகளிர் கிரிக்கெட்டையும் முன்னேற்ற WPL தொடர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதிதாத ஒரு டி20 தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் படி, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களை ஒன்று திரட்டி, அவர்களை வைத்து லெஜன்ட்ஸ் ப்ரீமியர் லீக் (LPL) தொடரை பிசிசிஐ நடத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான ஆலோசனைகளை முன்னாள் இந்திய வீரர்கள் கொடுத்திருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் இங்கிலாந்தில் உலக லெஜன்ட்ஸ் சாம்பியன்ஷிப் டி20 தொடர் நடைபெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வென்று மகுடம் சூடியுது. மேலும் 6 அணிகளின் முன்னாள் வீரர்கள் பங்கேற்ற இத்தொடரை கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்தனர். ஒரு தனியார் நிறுவனம் நடத்திய இத்தொடருக்கு கிடைத்த வெற்றி மற்றும் விளம்பரங்களைப் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

இதையும் படியுங்கள்:
சிக்ஸ் அடிச்சா அவுட்! எந்த நாட்டில் தெரியுமா?
LPL

இதன் காரணமாகத் தான், இந்தியாவில் முன்னாள் வீரர்கள் விளையாடும் வகையில் ஒரு டி20 தொடர் உருவாக வேண்டும் என பலரும் குரல் எழுப்பியுள்ளனர். மேலும் முன்னாள் வீரர்கள் வருமானம் ஈட்டுவதற்கு இது ஒரு வாய்ப்பாகவும் அமையும். அதோடு பிசிசிஐ-க்கும் நல்ல இலாபம் கிடைக்கும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனால் பிசிசிஐ எல்பிஎல் தொடர்பாக ஆலோசித்து வருகிறது. அடுத்த ஓராண்டுக்குள் எல்பிஎல் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐபிஎல் போன்றே இத்தொடரிலும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கும் வாய்ப்பை பிசிசிஐ வழங்கும்.

ஆகையால் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த முன்னாள் வீரர்களின் ஆட்டத்தைக் காண தயாராக இருப்பார்கள். ரசிகர்களை குஷிப்படுத்த முன்னாள் வீரர்களும் நன்றாக செய்லபடுவார்கள் எனத் தெரிகிறது. அதிலும் முக்கியமாக சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக் மற்றும் யுவராஜ் சிங்கை மீண்டும் களத்தில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com