கான்வேயின் அதிரடி ஆட்டத்தில் அடுத்த வெற்றியை ருசித்த சிஎஸ்கே அணி!

கான்வேயின் அதிரடி ஆட்டத்தில் அடுத்த வெற்றியை ருசித்த சிஎஸ்கே அணி!

பிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 29ஆவது லீக் போட்டியில், நேற்று மாலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொண்டது, டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பந்து வீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஹேரி ப்ரூக் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.

ஹேரி ப்ரூக் 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்ததாக 26 பந்துகளைச் சந்தித்த அபிஷேக் சர்மா 1 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 21 ரன்னில் வெளியேற, கேப்டன் எய்டன் மார்க்ரம் 12 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்தார். முன்னதாக நடைபெற்ற போட்களில் சிறப்பாக விளையாடிய விக்கெட் கீப்பர் ஹெய்ரிக் கிளாசன் 17 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மயங்க் அகர்வால் 2 ரன் எடுத்து களத்தை விட்டு வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரவிந்திர ஜடேஜா தனது சிறப்பான பந்து வீச்சால் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கோடு களம் இறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். சென்னை அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்தபோது 35 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் முறையில் களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த ரஹானே மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் தொடக்க வீரர் கான்வே கடைசி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி 77 ரன்கள் குவித்தார். இறுதியில் சென்னை அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வெற்றி பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com