

ஒலிம்பிக் போட்டிகள் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட் இடம்பெறுவதால் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.ஒலிம்பிக் போட்டிகளில் நீண்ட காலமாக கிரிக்கெட் சேர்க்கப்படாமல் இருந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறுவதற்கான தகுதிகளை சமீபத்தில் வெளியிட்டது.
ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதற்கு ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் ஒவ்வொரு அணிகள் தேர்ந்தெடுக்கப்படும். அதன்படி ஆஸ்திரேலிய கண்டத்தில் ஆஸ்திரேலியாவும் , ஆப்பிரிக்க கண்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் , ஐரோப்பிய கண்டத்தில் இங்கிலாந்து அணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில், ஏ பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்ததாலும் , ஆசிய கண்டத்தின் தகுதிமிக்க அணியாக இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது. அதே கண்டத்தில் அதிக அளவு கிரிக்கெட் அணிகள் இருந்தாலும் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகள் விளையாட்டில் வெற்றிகரமான செயல்பாடுகள் இல்லாததால், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தகுதிகளை இழந்தன.
மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற மிகக் கடுமையாக போராடினாலும் , அதனால் நுழைய முடியவில்லை. அதேவேளையில் ஒரு நாள் உலகக் கோப்பை சாம்பியன் அணியாக இந்திய மகளிர் அணி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டி 20 கிரிக்கெட் தரவரிசையில் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தில் இந்திய அணி இருப்பதால் , ஆசிய அணிகளிலேயே ஒலிம்பிக்கில் விளையாட தகுதி வாய்ந்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலான விஷயமாகும்.
தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகளும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதை ஒலிம்பிக் கமிட்டி உறுதி செய்துள்ளது. வருகிற 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில், மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டிகளை முதன்முறையாக கண்டு களிக்கலாம். அதேநேரம் ஒலிம்பிக் போட்டிகளில் 6 அணிகள் பங்கேற்க உள்ளதால், மற்ற அணிகளை தேர்வு செய்யும் முயற்சியில் ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஐசிசி ஈடுபட்டுள்ளது.
எப்பொழுதும் போட்டியை நடத்தும் நாட்டிற்கு, விளையாட்டு போட்டிகளில் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி 2026 ஜூன் 30 முதல் டிசம்பர் 31 வரையில், ஐசிசி மகளிர் டி20ஐ தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் அமெரிக்கா நுழைந்தால், அவர்கள் மகளிர் கிரிக்கெட் அணி ஒலிம்பிக்கில் பங்கு பெற தகுதி பெறும் . ஆனால் ,அமெரிக்கா தற்போது இந்த பட்டியலில் 20 வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிற்கு வாய்ப்பு குறைவாக இருப்பதால் , 2027 மார்ச் 1 நிலவரப்படி ஐசிசி மகளிர் டி20ஐ தரவரிசையில் தகுதி பெறாத அணிகளில், உயர்ந்த இடத்தில் உள்ள அணிக்கு இடம் அளிக்கப்படும். அமெரிக்க கண்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி தர வரிசை பட்டியலில் முன்னணியில் இருந்தாலும் , அவர்கள் ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்படாதால் அதற்கென்று தகுதி போட்டி நடைபெறும். அதில் இந்த அணி வெல்லும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு பெரிய முயற்சிகள் எடுத்த ஐசிசி தலைவர் ஜெய்ஷா கூறுகையில் " ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட் இணைந்து இருப்பது ஒரு மைல் கல் , கிரிக்கெட்டின் மிகச்சிறந்த அம்சங்களை வெளி உலகத்திற்கு காட்ட ஒரு வாய்ப்பாகும்" என்று கூறியுள்ளார்.