ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக சேர்க்கப்பட்ட கிரிக்கெட்... ரசிகர்கள் மகிழ்ச்சி!

Cricket
CricketImg credit: iStock

லக அளவில் முக்கிய போட்டியாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக கிரிக்கெட் ,பேஸ்பால்,ஸ்குவாஷ், சாஃப்ட் பால், ஃப்லாக் பால் என நான்கு போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் போட்டி நான்காண்டுக்கு ஒருமுறை வெகு விமர்சியாக நடைப்பெறும். ஏறத்தாழ 200 நாடுகளும் 20 முதல் 30 போட்டிகளில் மற்றும் 300 நிகழ்வுகள் நடைபெறும்.மொத்தம் 1,500 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெறுபவர்கள்தான் ஆசிய கண்டத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு செல்வர்கள். அதேபோல், ஒவ்வொரு கண்டத்திலும் பல்வேறு நாடுகள் சேர்ந்து ஒலிம்பிக் போட்டிக்கு முந்தைய போட்டிகளை நடத்தும்.

ஒலிம்பிக் சின்னத்தில் குறிப்பிடப்படும் ஐந்து வளையங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா , ஐரோப்பா ஆகிய ஐந்து கண்டங்களை குறிக்கும். இதனை ஒலிம்பிக்கின் தந்தையான பியரி டெ கூபர்டின்தான் கண்டுபிடித்தார்.

கோடை மற்றும் குளிர்காலத்திற்கு ஏற்பவாறு இரண்டு நிலை ஒலிம்பிக் போட்டிகளாக பிரித்து நடத்துவார்கள். இதில் பெரும்பாலும் நிச்சல், அம்பு விடுதல், ஹாக்கி போன்ற தடகள போட்டிகள் மற்றும் பேட்மிட்டன், டென்னிஸ் போன்ற சண்டை சார்ந்த போட்டிகளே நடக்கும். ஆனால் உலகளவில் நடக்கும் இந்த போட்டியில் கிரிக்கெட் , பேஸ்பால் போன்றவை இல்லாதது ஒரு பெரிய குறையாகத்தான் இருந்துவந்தது. ஆனால் இப்பொழுது அந்த குறையும் தீர்ந்தது. பாரிஸ் நகரில் வரும் 2024ல் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்,பேஸ்பால்,ஸ்குவாஷ், சாஃப்ட் பால், ஃப்லாக் பால் போன்றவை சேர்த்துள்ளனர்.

இதனால், இந்த விளையாட்டுகளை விளையாடும் வீரர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com