கிரிக்கெட் பெரும்பாலும் "ஜென்டில்மேன் விளையாட்டு" என்று அழைக்கப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டு நான்கு நூற்றாண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய வரலாற்றைக் கொண்டுள்ளது. கிரிக்கெட் அதன் ஆரம்பகால அடிப்படை வடிவங்களிலிருந்து மாறுபட்டு தற்போது உலக அளவில் கலாச்சாரங்கள், சமூகங்கள் மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய விளையாட்டாக உருவெடுத்துள்ளது.
கிரிக்கெட் 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தோன்றிய விளையாட்டாகும., மேலும் இது இங்கிலாந்து நாட்டில் தோன்றியதாக அறியப்படுகிறது, அங்கு கிரிக்கெட் கிராமப்புற சமூகங்களால் விளையாடப்பட்டது. வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட முதல் கிரிக்கெட் விளையாட்டு 16 ஆம் நூற்றாண்டில் நடந்தது, மேலும் 17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை தாண்டி லண்டனிலும் பிரபலமானது.
கிரிக்கெட் போட்டிகள் பெரும்பாலும் பந்தையம் கட்டி விளையாடும் போட்டியாகதான் முதல் தொடங்கப்பட்டது. மேலும் கிரிக்கெட் விளையாட்டின் ஆரம்பகால வடிவங்கள் இன்று நாம் அறிந்த கிரிக்கெட் விளையாட்டை விட பெரிதும் வேறுபடுகின்றது. பல நூற்றாண்டுகளாக கிரிக்கெட் விளையாட்டின் விதிகள் படிப்படியாக புதுப்பிக்கப்பட்டது.
18ஆம் நூற்றாண்டு கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமைந்தது. ஏனெனில் இது ஆங்கிலேய உயர்குடியினரிடையே பிரபலமான பொழுதுபோக்கு விளையாட்டாக மாறியது. 1744 ஆம் ஆண்டு Marylebone Cricket Club (MCC) முதன்முதலில் கிரிக்கெட் விதிகள் வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தன. Marylebone Cricket Club (MCC) 1787 இல் நிறுவப்பட்டது மற்றும் கிரிக்கெட்டின் சட்டங்கள் மற்றும் வழிமுறைகளை அமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது.
இங்கிலாந்துக்கு பிறகு கிரிக்கெட்டின் விரிவாக்கம் 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கபட்டது. இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் கிரிக்கெட் பரவ ஆரம்பித்தது. முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி 1844ல் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் நடந்தது. அதே நேரத்தில் முதல் டெஸ்ட் போட்டி 1877 இல் இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் 'மெல்போர்னில்' நடைபெற்றது. "தி ஆஷஸ்" என்று அழைக்கப்படும் இந்த இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான போட்டி, கிரிக்கெட் விளையாட்டின் மிகச் சிறந்த போட்டிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
20 ஆம் நூற்றாண்டில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் (ODI) அறிமுகம் செய்யப்பட்டது. வரையறுக்கப்பட்ட ஓவர்களால் கிரிக்கெட் தொடர்ந்து வளர்ச்சியடைந்தது. கிரிக்கெட் விளையாட்டின் உலகளாவிய புகழ் உயர்ந்தது. 1975 ஆம் ஆண்டு முதன்முதலில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது, உலகம் முழுவதும் அதிகம் பார்க்கப்பட்ட விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது.
டி20 (20-20) கிரிக்கெட் தோன்றியதன் மூலம் கிரிக்கெட் மேலும் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. இது கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய பதிப்பாகும். இது இளைஞர்களை பெரிதும் ஈர்த்தது. 2008 இல் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (IPL), டி20 கிரிக்கெட்டின் பிரபலத்தை உலக அளவில் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது.
கிரிக்கெட் சமூக கலாச்சார மற்றும் எல்லைகளைத் தாண்டி, விளையாட்டுத் திறன்களின் உணர்வில் நாடுகளை ஒன்றிணைத்தது. ஒரு துடிப்பான கடந்த காலம் மற்றும் அற்புதமான எதிர்காலத்துடன் கிரிக்கெட் ஒரு உலகளாவிய விளையாட்டு நிகழ்வாக மாறியுள்ளது. ஒரு எளிய மட்டை மற்றும் பந்து இவைதான் இந்த சாதாரண விளையாட்டை விளையாடுபவர்கள் திறன் மூலம் ஒரு அசாதாரண விளையாட்டாக பார்ப்பவர்களின் பேரார்வத்தை தூண்டும் கருவியாக உள்ளது.