Baseball
Baseball

கிரிக்கெட்டை கருவறுத்த Baseball! 

Published on

அமெரிக்காவில் ஒரு காலத்தில் பிரபலமான விளையாட்டாக இருந்த கிரிக்கெட், ஏன் பேஸ் பால் (Baseball) வருகைக்குப் பிறகு அழிந்து போனது தெரியுமா? அதற்கான காரணத்தை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.‌

18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் குடியேறிகள் கிரிக்கெட்டை அமெரிக்காவுக்குக் கொண்டு வந்தனர். அப்போது கிரிக்கெட் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை நகரங்களில் பிரபலமாக இருந்தது. அமெரிக்க புரட்சியின்போது பிரிட்டனுடன் இருந்த உறவின் காரணமாக கிரிக்கெட்டின் பிரபலம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. 

19ஆம் நூற்றாண்டின் மத்தியில் பேஸ் பால் என்ற புதிய விளையாட்டு அமெரிக்காவில் உருவாகி வேகமாக பிரபலமடைந்தது. பேஸ் பால் கிரிக்கெட்டை விட குறைவான நேரத்தில் விளையாடக்கூடிய ஒரு விளையாட்டு என்பதால், அமெரிக்க மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. மேலும், இந்த விளையாட்டு அமெரிக்க மக்களின் கலாச்சாரத்துடன் இணைந்து வளர்ந்தது. 

கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணங்கள்: 

கிரிக்கெட், பேஸ் பால் விளையாட்டை விட நீண்ட நேரம் எடுக்கும் ஒரு விளையாட்டு. அமெரிக்கர்கள் பொதுவாக குறைந்த நேரத்தில் அதிக உற்சாகத்தைத் தரும் விளையாட்டுகளை விரும்புவதால், கிரிக்கெட் அதன் பிரபலத்தன்மையை இழந்தது.‌ 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பேஸ் பால் அமெரிக்காவின் தொழில் முறை விளையாட்டாக மாறியது. இதன் மூலம் பேஸ் பால் வீரர்கள் அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்பைப் பெற்றனர். இதனால், இளைஞர்கள் கிரிக்கெட்டை விட பேஸ் பால் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டினர். 

அமெரிக்கா ஒரு பெரிய நாடு என்பதால், ஒரே விளையாட்டு நாடு முழுவதும் பிரபலமாக இருப்பது கடினம். பேஸ் பால் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பிரபலமாக இருந்தது. ஆனால், கிரிக்கெட் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பிரபலமாக இருந்ததால், அது காலப்போக்கில் முற்றிலுமாக இல்லாமல் போனது. 

பேஸ் பால் விளையாட்டு அமெரிக்காவில் ஊடகங்களால் அதிகமாகப் பகிரப்பட்டது. இதனால், பேஸ் பால் விளையாட்டு பற்றிய செய்திகள், விளம்பரங்கள் அனைவருக்கும் போய் சேர்ந்தன. ஆனால், கிரிக்கெட் அந்த அளவுக்கு ஊடகங்களால் பரப்பப்படவில்லை. 

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: லப்பர் பந்து - தொடரும் கிரிக்கெட் செண்டிமெண்ட் வெற்றி! இயக்குனருக்கு பூங்கொத்து!
Baseball

இருப்பினும் 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் கிரிக்கெட் மீண்டும் ஒரு புதிய தொடக்கத்தை எடுத்துள்ளது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமடைந்து வருகிறது. சமீபத்தில் நடந்த 20-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்குப் பிறகு, அமெரிக்காவில் மக்கள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து வந்த மக்கள் கிரிக்கெட் விளையாடுவதால், அமெரிக்காவில் கிரிக்கெட் அகாடமி மற்றும் கிளப்புகள் உருவாகி வருகின்றன. 

கிரிக்கெட் அமெரிக்காவில் முற்றிலும் அழிந்து போகவில்லை. இப்போதைய தலைமுறை கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, எதிர்காலத்தில் கிரிக்கெட் அமெரிக்காவில் மீண்டும் ஒரு முக்கியமான விளையாட்டாக மாறும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. 

logo
Kalki Online
kalkionline.com