

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற 53-வது லீக் போட்டியில் இன்றைய ஐபிஎல் தொடரில் 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் 53-வது லீக் போட்டியில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது.
சென்னை அணி 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
லக்னோ அணி 10 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. பிளே-ஆப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது.
இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியதில் 3 ஆட்டங்களில் லக்னோவும், 2 ஆட்டங்களில் சென்னையும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் ஏற்றம் காண தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது . அதனை தொடர்ந்து 204 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய சென்னை அணி 19.2 ஓவர்களிலேயே 208 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. சொந்த மண்ணான சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களின் உற்சாகத்திற்கு மத்தியில் அதிரடியாக விளையாடிய சிஎஸ்கே வீரர்கள் இந்த மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.