Jadeja and Ruthuraj
Jadeja and Ruthuraj

CSK Vs KKR: புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு வந்த சென்னை அணி!

Published on

சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 32 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அணியின் அதிகபட்ச ரன்களை எடுத்தார். நரைன் 20 பந்துகளில் 27 ரன்களையும், அங்க்ரிஷ் 18 பந்துகளில் 24 ரன்களையும் எடுத்தனர். இவைதான் அணியின் அடுத்தடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தன.

கொல்கத்தா அணியில் யாராலும் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்த முடியாததால் அணி மோசமான ரன்களைக் குவித்தது. அதேபோல் சென்னை அணியின் பவுலர்களும் சிறப்பாகப் பந்து வீசினார்கள். அணியின் வீரர்கள் ஜடேஜா மற்றும் துஷார் தேஷ் பாண்டே தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முஸ்தாஃபிசுர் ரஹ்மானும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை அணியின் சொந்த மண்ணில் இவ்வளவு குறைவான இலக்கு என்பது அவர்களுக்கு சாதாரணமாகவே இருந்தது. ஆகையால், சென்னை அணி குறைவான ஓவர்களிலேயே ஆட்டத்தை முடிக்கத் திட்டம் தீட்டியது. அந்தவகையில் கேப்டன் பதிவி ஏற்றதிலிருந்து மிகவும் சுமாராக விளையாடிய ருதுராஜ் 58 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினார். ரச்சின் 15 ரன்களும், டேரில் மிட்சல் 25 ரன்களும், ஷிவம் டூபே 28 ரன்களும் எடுத்து 17.4 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்தனர்.

அந்தவகையில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றது. ஐபிஎல் தொடரில் வெற்றியுடன் தொடங்கிய சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளில் மோசமானத் தோல்வியைச் சந்தித்தது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் கவலை தெரிவித்த வண்ணம் இருந்தனர். இந்தநிலையில் தற்போது ருதுராஜின் அதிரடி ஆட்டமும், அணியின் வெற்றியும் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையை அளித்துள்ளன.

இதையும் படியுங்கள்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் (சத) சாதித்த சகோதரர்கள்..!
Jadeja and Ruthuraj

இந்த வெற்றியால் சென்னை அணி ஐந்து போட்டிகள் விளையாடி, மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை அணி நான்காவது இடத்திற்கு முன்னேறினாலும், கொல்கத்தா அணி நான்கு போட்டிகள் விளையாடி, அதில் 3 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com