இந்திய அணி நாடு திரும்பவதில் சூறாவளி சிக்கல்!

Indian team
Indian team
Published on

டி20 உலகக்கோப்பை சனிக்கிழமை அன்று முடிந்தது. அந்தவகையில் தற்போது இந்திய அணி நாடு திரும்புவதில் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 2ம் தேதி தொடங்கி கடந்த சனிக்கிழமை வரை நடந்தது. இந்தத் தொடரில் இந்திய அணி ஒரு போட்டிக்கூட தோல்வியடையாமல், சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தென்னாப்பிரிக்கா அணியுடன் இந்திய அணி இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது. அதன்பின்னர் இந்திய மக்கள் அலப்பறை ஸ்டார்ட் என்பதுபோல நாடெங்கிலும் கொண்டாட்டங்கள் நிரம்பின. அதேபோல் இந்திய வீரர்களும் கோப்பையுடன் வித்தியாச வித்தியாசமாக புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டனர்.

இதனையடுத்து இன்று இந்திய அணி நாடு திரும்புவதாக இருந்தது. எனினும் தீவு நாடான பார்படாஸை சூறாவளி தாக்கியுள்ளதால், இந்திய அணி இந்தியாவிற்கு திரும்புவதில் சிக்கல் நீடிக்கிறது. திங்கட்கிழமை காலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'பெரில்' சூறாவளி காரணமாக இந்திய அணி அங்கு சிக்கிக்கொண்டது. பெரில் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த 3 வகை புயல் காரணமாக பார்படாஸில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. பெரில் கரையைக் கடந்தவுடன் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெரில், 2024 அட்லாண்டிக் பருவத்தின் முதல் சூறாவளி ஆகும். ஞாயிற்றுக்கிழமை காலை பார்படாஸ் நோக்கி திரும்பியபோது சூறாவளி "மிகவும் ஆபத்தான" வகை 3 புயலாக தீவிரமடைந்தது. தேசிய சூறாவளி மையத்தின் கூற்றுப்படி, சூறாவளி வரும் நாட்களில் அதன் பாதையில் நிறைய அழிவைக் கொண்டுவரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சிசுவின் பாலினத்தை தெரியப்படுத்தியது அம்பலம்!
Indian team

ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் அல்லது திங்கட்கிழமை முற்பகுதியில் விண்ட்வார்ட் தீவுகளை அடையும் போது, ​​பெரில் வகை 4 சூறாவளி "மிகவும் ஆபத்தான" சூறாவளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. பருவத்தின் முதல் சூறாவளியின் ஆரம்ப நேரம் அசாதாரணமானது. முன்னர் எதிர்பார்க்கப்பட்ட கணிப்பின்படி, முதல் சூறாவளிக்கான சராசரி தேதி ஆகஸ்ட் 11 ஆகும். ஆனால், அதற்கு முன்னரே இந்த சூறாவளி வந்து கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதனால், இந்திய அணி வீரர்கள் எப்போது நாடு திரும்புவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com