#BREAKING IPL 2026: சேப்பாக்கத்தில் CSK-வின் அதிரடி ‘ரிட்டர்ன்’: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது சென்னை..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அரங்கேறிய இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி.
CSK Won the match
DC vs CSKimage credit-sports.ndtv.com
Published on

19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அரங்கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி டெல்லி கேபிட்டல்சை எதிர்கொள்கிறது.

நடப்பு ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே இதுவரை மோதிய 3 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.

இன்றைய போட்டிக்கான டாஸில் பெற்றி பெற்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்ய, அதனை தொடர்ந்து பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதலே வெற்றிக்காக கடுமையாக போராடிய போதிலும் இறுதியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவிடம் தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது சிஎஸ்கே அணி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com