ஐபிஎல் 2026: சிஎஸ்கே அதிரடி வெற்றி: டெல்லியை வீழ்த்தி பிளே-ஆப் ரேஸில் முன்னேற்றம்!

டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று அரங்கேறிய 48-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி வாகை சூடியது.
Chennai Super Kings team
Chennai Super Kings teamimage credit-news18.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று அரங்கேறும் 48-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.

டெல்லி அணி 9 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

சென்னை அணி 9 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

அதாவது புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகள் 12 புள்ளிகளுக்கு மேல் பெற்று பிளே ஆப் ரேசில் இருக்க, மீதமுள்ள ஒரு இடத்திற்காக சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை நடைபெறுகிறது.

இருஅணிகளும் 5-வது வெற்றியை வசப்படுத்த கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதி கொண்டதில் 20 சென்னையும், 12-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய சென்னை அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இறுதியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக்கொடி நாட்டியது.

இதன் மூலம் சிஎஸ்கே அணி தனது 5 வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேறியது.

logo
Kalki Online
kalkionline.com