#BREAKING ஐபிஎல் 2026: டெல்லியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது குஜராத்..!!

டெல்லியில் நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
DC vs GT
DC vs GTimage credit-sportstar.thehindu.com
Published on

19-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 14-லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டத்திலும், டெல்லி 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய டெல்லி அணி, குஜராத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இறுதியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com